கம்பராமாயணம் 6776 · யுத்த 7.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிலம் அரங்கிய வேரொடு - நிலத்தில் அழுந்தியுள்ள வேரொடு; நேர் பறித்து - மரங்களை வானரங்கள் நேரே பறித்தமையால்; அலமரும் துயர் எய்திய ஆயினும் - கலங்கும்படியான துன்பத்தை அடைந்த போதும்; கொடிகள் - அம்மரங்களைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகள்; மாசு இலாக் குலமடந்தையர் என- குற்ற மற்ற குலமகளிரைப் போல; வலமரங்களை விட்டில - தாம் சுற்றிக் கொண்டிருந்த மரங்களை விட்டு நீங்காதனவாய் மரங்களோடு கடலில் வீழ்ந்தன.
அரங்கிய - அழுந்திய. அலமருதல் - கலங்குதல். வல் மரங்கள் - வலிவுள்ள மரங்கள் (சுற்றியுள்ள மரங்களுமாம்). கணவன் உயிர்நீங்க, உடனுயிர் துறக்கும் கற்புடைய மகளிர் உவமானம், கொடி - உவமேயம். விலைமகளிரை முன்பாடலாலும் குலமகளிரை இப் பாடலிலும் நிரலாக நிறுத்தி உவமை நயந்தோன்றக் கம்பர் உலகியல் விளக்கம் தந்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though they suffered torment when the trees were torn straight out
- with roots sunk deep in the earth,
- the creepers did not leave their strong trees, like
- spotless wives of noble family.
What the poem says
This verse is set deliberately against the previous one. The creepers twined around the trees suffer too when the monkeys rip the trees out by the roots, yet they do not let go. They fall into the sea still clinging to them.
They are like faithful wives of good family who will not leave their husbands even in death. Having just shown the fickle courtesan in the bees, the poet now shows the loyal wife in the creepers.