கம்பராமாயணம் 6777 · யுத்த 7.60

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துப்பு உறக் கடல் தூய துவலையால் - வானரங்கள் பெரிய மலைகளைக் கடலில் வீசுவதால், அந்த வலிமை மிக்க கடல்தூவிய நீர்த்துவலைகளால்; அப்புறக் கடலும் சுவை அற்றன - அண்டத்துக்கு அப்பாலுள்ள கடல்களும் சுவை இழந்தன; எப்புறத்து உரும் ஏறும் - எப்புறத்திலுள்ள வெப்பம் மிகுந்த பேரிடிகளும்; குளிர்ந்தன - வெம்மை நீங்கிக் குளிர்ந்து போயின; மேகம் உகுத்த நீர் - மேகங்கள் சொரிந்த மழைநீரும் கூட; உப்பு உறைத்தன - உவர்ப்புடையதாய் உறைத்தன.

துப்பு- வலிமை. அப்புறக் கடல்- பெரும் புறக்கடல். உரும் ஏறு - பேரிடி. உகுத்த - சொரிந்த. பெரும்புறக்கடல் நன்னீர் உடையது. அதன் நீரும் சுவையற்றதாகியது என்பார் 'அப்புறக்கடலும் சுவை அற்றன' என்றார். எல்லாப் பக்கங்களிலும் உள்ள இடியேறு நீர்த் திவலைகளால் குளிர்ந்தன என்றார். மேகங்கள் பொழியும் மழைநீர் நன்னீர். அதுவும் கடலின் உப்பு நீர்த்திவலையால் 'உப்பு உறைத்தன' என்றார். அப்புறக் கடல், உரும், மேகம் உகுத்தநீர் இவைகளின் இயல்பை மாற்றும் அளவுக்கு கடல்நீர்த்திவலைகள் மிக்கிருத்தலைக் கூறுவாராய் கடலை, 'துப்புறக் கடல்'

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the spray the mighty sea flung out,
  2. even the outer ocean beyond lost its taste;
  3. the thunderbolts on every side grew cool;
  4. and the water the clouds poured down tasted of salt.

What the poem says

The salt spray thrown up by the mighty sea reaches everywhere and changes the nature of things.

The great outer ocean at the rim of the world, which is fresh water, loses its sweet taste. The fiery thunderbolts are cooled. Even the rain falling from the clouds turns salty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuppu uṟak kaṭal tūya tuvalaiyāl
ap puṟak kaṭalum cuvai aṟṟaṉa;
ep puṟattu urumēṟum kuḷirntaṉa;
uppu uṟaittaṉa mēkam ukutta nīr.