கம்பராமாயணம் 678 · பால 10.126

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழும் கதிரவனும் - உதிக்கும் சூரியனும்; நாண - வெட்கம் அடையும்படி; இருகண் சிவந்தனன் - (தன்னுடைய) இரண்டு கண்களும் செந்நிறம் அடைந்து; நெஞ்சம் புழுங்கினன் - மனம் தவித்தவனாய்; வடவை தீய - வடவைத் தீயும் தீய்ந்து போகுமாறு; மயிர்ப்புறம் பொறியின் - எனது உடம்பின் உரோமத் துவாரங்கள்; துள்ள - தீப்பொறிகளை வெளியிட; அழுங்கல் இல் - (கோசிகன் தன் மைந்தர்களைப் பார்த்து) இரக்கம் இல்லாத; சிந்தையீர் - மனம் உடையவர்களே!; நீர் அடவிகள்தோறும் - நீங்கள் காடுகள் எங்கும்; சென்று - திரிந்து; ஒழுங்கு அறு - நாகரிகம் இல்லாத; புளிஞர் ஆகி - வேடர்களாய்; உறு துயர் உறுக - மிக்க துன்பத்தை அடைவீராக, என்றான் - என்று சபித்தான்.

கதிரவன் நாணுதல்: கோசிகன் கண்களின் செந்நிறம் தனது கதிர் மண்டலத்தின் செந்நிறத்தைக் காட்டிலும் மிக்கிருத்தல்: அவனது கோபம் தனது கதிர்களின் வெப்பத்தை விடக் கூடியிருத்தல். வடவை - வடவாமுகாக்கினி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His two eyes reddened so that even the rising sun was ashamed; his heart
  2. seethed; as sparks leapt from the pores of his body enough to scorch the submarine fire,
  3. he said, 'You of pitiless minds, go through the forests
  4. and become lawless hunters and suffer great misery!'

What the poem says

Kaucikaṉ's fury at his sons' refusal is enormous: his eyes turn redder than the rising sun, and sparks fly from every pore of his body hot enough to burn even the mare-headed fire that lies beneath the ocean. He curses his heartless sons to become uncivilised hunters roaming the forests in misery.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻum katiravaṉum nāṇac civantaṉaṉ iru kaṇ; neñcam
puḻuṅkiṉaṉ, vaṭavai tīya mayirppuṟam poṟiyiṉ tuḷḷa,
'aḻuṅkal il cintaiyīr nīr aṭavikaḷtōṟum ceṉṟē,
oḻuṅku aṟu puḷiñar āki uṟu tuyar uṟuka' eṉṟāṉ.