கம்பராமாயணம் 679 · பால 10.127

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாமுனி வெகுளிதன்னால் மடிகலா மைந்தர் நால்வர்!
தாம் உறு சவரர் ஆகச் சபித்து எதிர்'சலித்த சிந்தை
ஏம் உறல் ஒழிக; இன்னே பெறுக' என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கிப் பின்னரும் குறிக்கல் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

மாமுனி - பெருந்தவ முனிவனான வசிட்டனது; வெகுளி தன்னால் - கோபத்தால்; மடிகலா - (முன்பு) இறவாது இருந்த; மைந்தர் நால்வர்தாம் - தன் மைந்தர் நால்வரும்; உறு சவரர் ஆக - இழிந்த வேடராகும்படி, சபித்து - (விசுவாமித்திரன்) சபித்துவிட்டு; எதிர் - (அதன்பின்பு) தனக்கு எதிரில் நின்ற; கோ மருகனுக்கு - மருமகனான சுனச்சேபனுக்கு; சலித்த சிந்தை - கலங்கிய மனத்தோடு; ஏமுறல் ஒழிக - துன்பம் அடைவதை நீக்குக; இன்னே - இப்பொழுதே; இரண்டு விஞ்சை - இரண்டு மந்திரங்களை; பெறுக - பெற்றுக் கொள்க; என நல்கி - என்று அவற்றை (உபதேசம் மூலம்) கொடுத்தருளி; பின்னரும் - மீண்டும்; குணித்தல் உற்றான் - வரையறுத்து உரைக்க முற்பட்டான்.

மடிகலார்: காமதேனுவைக் கோசிகன் அடைய முயன்ற காலத்தில் வசிட்டனால் சபிக்கப்பட்டவன். எஞ்சியவர் நால்வர் மட்டுமே. சவரர் - சபரர் வேடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having cursed his four sons, who had not died by the great sage's wrath,
  2. to become Cavarar, he said, 'Let your troubled mind
  3. cease its fear; take these now,' and gave two spells
  4. to his royal nephew, and went on to instruct him further.

What the poem says

The four sons who had escaped death when Vaciṭṭaṉ's glance killed the hundred are now cursed by their father to become Cavarar, forest hunters. Kaucikaṉ then comforts his nephew Cuṉaccēpaṉ and teaches him two sacred mantras, and goes on to explain how to use them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā muṉi vekuḷitaṉṉāl maṭikalā maintar nālvar!
tām uṟu cavarar ākac capittu etir' calitta cintai
ēmuṟal oḻika; iṉṉē peṟuka' eṉa iraṇṭu viñcai
kō marumakaṉukku nalkip piṉṉarum kuṟikkaluṟṟāṉ.