கம்பராமாயணம் 6780 · யுத்த 7.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓடும் ஓட்டரின் - விரைந்தோடும் தூதுவர்களைப் போல; ஒன்றின் முன் ஒன்று போய் - வானரங்கள் ஒன்றையொன்று முந்திச் சென்று; காடும் நாடும்- காடாகிய முல்லை நிலத்தும், நாடாகிய மருத நிலத்தும்; மரங்களும் கற்களும் நாடும் - மரங்களையும் கற்களையும் தேடும்; நளிர்கடல் நாட்டில் நாட்டும் - (தேடிக் கொண்டு வந்தவைகளை) கடல் நிலமான நெய்தல் நிலத்தில் நிலை நிறுத்தும்; இப்பூமியில் - இந்தப் பூமியிலே எங்கும்; ஓர் பூடும் ஆட்டல் இலாய - ஒரு புல் பூடும் ஆடுதல் இல்லை ஆயின.
ஓட்டர் - விரைந்தோடும் தூதுவர். காடு - முல்லை நிலம், நாடு - மருதநிலம். நளிர்கடல் - குளிர்ந்த கடல். கடல்நாடு - நெய்தல். வானரங்கள் மரங்களையும் கற்களையும் பூமியெங்கும் தேடிக் கொண்டு வந்து, அணைகட்டக் கடலில் போடுவதால் பூமியில் எங்கும் புல், பூடும் ஆடாதனவாயின என்பது கருத்து. இலாய - இல்லையாயின. வானரங்களின் செயலால் முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்கள் மயங்கிக் கலந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Running like swift messengers, each racing ahead of the next,
- through forest and farmland they seek out trees and rocks
- and plant them in the country of the cool sea, so that
- on this earth not a single shrub was left to sway.
What the poem says
The monkeys race across the forests and the farming country like runners carrying urgent news, each trying to get ahead of the others, searching out trees and rocks.
Everything they find they set down in the sea. They strip the earth so completely that not one bush is left standing to sway in the wind. Forest, field and seashore, the three classical landscapes, are all jumbled together.