கம்பராமாயணம் 6781 · யுத்த 7.64

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வரைப் பரப்பும் வனப் பரப்பும் உவர்த்
தரைப் பரப்புவது என்ன தனித்தனி
உரைப் பரப்பும் உறுகிரி ஒண்கவி
கரைப் பரப்பு கடற் பரப்பு ஆனதால்.

பொருள் · Meaning in Tamil

ஒண்கவி - மிகுதியான வானர வீரர்கள்; வரைப் பரப்பும் வனப் பரப்பும் - மலைநிலத்தையும், காட்டு நிலத்தையும்; உவர் தரைப் பரப்புவ தென்ன - கடலையடுத்த நெய்தல் நிலத்திலே கொண்டு வந்து பரப்புகிறது என்னும்படி; தனித்தனி உரைப் பரப்பும் உறுகிரி - தனித்தனியே மலைகளைக் கொணர்ந்து புகழ்மிகப் பரப்பி வைக்கும் அதனால்; கரைப் பரப்பு - கடலை அடுத்த நிலப்பரப் பெல்லாம்; கடற் பரப்பு ஆனதால் - கடல் தண்ணீர் பொங்கிக் கடலாக மாறியது.

ஒண்மை - இங்கு மிகுதி குறித்தது. உவர்த்தரை- கடற்பகுதி. உரை- புகழ். 'ஒண்கவி தனித்தனி உரைப்பரப்பும்' என இயைத்து வானரம் ஒவ்வொன்றும் தமது செயலால் தனித்தனியே புகழ் பரப்பும் எனலும் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if spreading the expanse of the mountains and the expanse of the forests
  2. over the expanse of the salt shore, the countless monkeys
  3. each brought mountains and spread them, spreading their fame,
  4. and so the expanse of the shore became the expanse of the sea.

What the poem says

The verse plays on the word parappu, 'expanse'. The host of monkeys seems to be moving the whole spread of mountain country and forest onto the salty seashore.

Each monkey brings its own mountain, and each, by its own deed, spreads its fame. Meanwhile the displaced sea floods the land, so that the shore itself becomes open sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varaip parappum vaṉap parappum uvar
taraip parappuvatu eṉṉa taṉit taṉi
uraip parappum uṟu kiri oṇ kavi
karaip parappum kaṭaṟ parappu āṉatāl.