கம்பராமாயணம் 6782 · யுத்த 7.65

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓங்கல் இலங்கையை முற்ற - திரிகூட மலையிலிருக்கும் இலங்கையை அடைய; மூன்று பகலிடை அணை உற்றது - மூன்று நாட்களிலே அணை தகுந்ததாயிற்று; முற்றவும்- அணைகட்டி முற்றுப் பெற்றவுடன்; பெற்ற ஆர்ப்பு- வானரங்களின் ஆரவாரமுழக்கத்தால்; விசும்பு பிளந்தது - வானமே இரண்டாகப் பிளந்து போயிற்று; மற்று இவ்வானம் - இப்போதுள்ள இந்தவானம்; பிறிது ஒருவான் கொலோ - புதிதாக உண்டான வேறு ஒருவானம்தானோ.

ஓங்கல் - மலை (இங்கு திரிகூட மலையை உணர்த்தும்). முற்ற - நெருங்க (அடைய), மூன்று பகல் - மூன்று நாட்கள். உற்றது - தகுந்தது, பொருத்தமானது. வானம் பிளந்து போயிற்றென்றால் இப்போதும் வானம் இருக்கிறதே என வினவுவார்க்கு விடை கூறுதல் போல, 'ஒருவேளை இது வேறு ஒரு வானமோ' என்பார் 'பிறிது ஒரு வான் கொலோ' என்றார். வான்மீகி முனிவர் அணை ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட, கம்பர் மூன்று நாட்களில் கட்டி முடிக்கப் பட்டது என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The causeway reached mountain-set Ilaṅkai,
  2. to close in on it, within three days; and when it was complete,
  3. the roar that rose split the sky apart;
  4. so is this sky we see some other sky?

What the poem says

In three days the causeway is finished and reaches Ilaṅkai, the city on Mount Trikūṭa. In Vālmīki's version the work takes five days; Kampaṉ makes it three.

When it is done, the monkeys' shout of triumph splits the sky in two. If someone objects that there is still a sky overhead, the poet has his answer ready: perhaps it is a different sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟṟatāl aṇai ōṅkal ilaṅkaiyai
muṟṟa mūṉṟu pakaliṭai; muṟṟavum
peṟṟa ārppu vicumpu piḷantatāl;
maṟṟu iv vāṉam piṟitu oru vāṉkolō?