கம்பராமாயணம் 6784 · யுத்த 7.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மெய்யின் ஈட்டத்து - வாய்மையாகிய செல்வத்தை உடைய; இலங்கையாம் மென்மகள் - இலங்கையாகிய மெல்லியல்புடைய பெண்; பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாது - பொய்மையாளனாகிய இராவணன் சேர்த்து வைத்த தீமையைப் பொறுக்க மாட்டாதவளாய்; ஐயன் ஈட்டிய சேனை கண்டு - இராமன் தொகுத்த வானர சேனையைப் பார்த்து; அன்பினால் கையை நீட்டிய - இராமபிரானிடம் கொண்ட அன்பினாலே இரு கைகளையும் நீட்டி அழைக்கின்ற; தன்மையும் காட்டும் - தன்மையையும் இந்த அணை காட்டும்.
ஈட்டம் - செல்வம் (ஈட்டப்படுவது ஈட்டம்). அயோதயாகாண்டத்தில் மிதிலையாகிய மகள் "கைகளை நீட்டி, ஐயனை ஒல்லைவாவென்றழைப்பது போன்றது" என்றது (480) ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It shows, too, how the gentle maiden Ilaṅkai, rich in truth,
- unable to bear the evil the liar had heaped up,
- seeing the army the Lord had gathered,
- stretched out her arm in love.
What the poem says
Another way of seeing the causeway. Ilaṅkai is pictured as a gentle young woman, truthful at heart, who can no longer bear the wickedness piled up by the deceitful Irāvaṇaṉ.
Seeing Irāmaṉ's army on the far shore, she stretches out her arm to welcome him, and that outstretched arm is the bridge. Earlier in the epic the city of Mithilā was pictured the same way, its banners like hands beckoning Irāmaṉ to come quickly.