கம்பராமாயணம் 6785 · யுத்த 7.68

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கானயாறு பரந்த கருங்கடல் - காட்டாறுகள் பலவும் வந்து பரந்துள்ள கரிய கடலில்; ஞான நாயகன் சேனை நடத்தலால்- ஞான நாயகனான இராமபிரானது வானர சேனை நடப்பதால்; ஏனையாறு இனி யானலது ஆர் எனா - என்னைத் தவிர வேறு தகுந்த நெறியாவார் யாருளர் என்று; வானயாறு - விண்ணுலகிலுள்ள ஆகாயகங்கை; இம்பர் வந்தது மானும் - இவ்வுலகிலே வந்திருப்பதை ஒத்து இவ்வணை காணப்படும்.

ஞான நாயகன் - ஞானமே வடிவான தலைவனான இராமபிரான். "ஞான நாயகன்" என இராமபிரானைப் பின்னும் குறிப்பார் (8642). மானும் - ஒக்கும். இம்பர் - இவ்வுலகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the army of the Lord of wisdom marched across
  2. the dark sea into which the forest rivers spread,
  3. saying, 'What other path is there now but me?',
  4. it looked as if the river of the sky had come down here.

What the poem says

The causeway, crowded with Irāmaṉ's army marching across the dark sea, looks like the Milky Way, the heavenly Ganges, come down to earth.

The poet has the river of the sky say: what other way, what other river, is there for him now but me? The word āṟu means both 'river' and 'path', so the bridge is both a shining river and the road to victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṉa yāṟu paranta karuṅ kaṭal
ñāṉa nāyakaṉ cēṉai naṭattalāl
'ēṉai yāṟu iṉi yāṉ alatu ār?' eṉā
vāṉa yāṟu impar vantatu māṉumāl.