கம்பராமாயணம் 6786 · யுத்த 7.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கல்கிடந்து - (வானர வீரர் கடலில் எறிந்த) மலைகளில் கிடந்து; ஒளிர் காசினம் காந்தலால் - ஒளி வீசும் பலவகை மணித்திரள்கள் ஒளியை உமிழ்வதால்; மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை - வானர வீரர்கள் கட்டியதாய் விளங்குகின்ற அவ்வணை; எல்கடந்த இருளிடை - சூரியன் மறைந்த இரவு நேரத்திலே; இந்திரன் வில் கிடந்தது என்ன - வானத்திலே இந்திரவில் கிடந்தது போல; விளங்கும் - விளங்கலாயிற்று.
கல் - மலை. மலைகளிலே கிடந்து ஒளி வீசும் பன் மணித்திரளைக் 'கல் கிடந்து ஒளிர் காசினம்' என்றார். மற்கடம் - குரங்கு. எல் - சூரியன். 'எல்கடந்த இருள்' என்பதற்குப் பகலை வென்று விளங்கியஇருள் எனினுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the gems lying in the rocks shone and blazed,
- the gleaming causeway the monkeys built
- glowed like Intiraṉ's bow laid out
- in the darkness after the sun has gone.
What the poem says
At night the many-coloured gems set in the rocks of the causeway glow brightly.
The long glittering line across the dark sea looks like a rainbow, the bow of Intiraṉ, the king of the gods, lying stretched out in the night.