கம்பராமாயணம் 6788 · யுத்த 7.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1எய்தி'யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை'என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே.
பொருள் · Meaning in Tamil
எய்தி - இராமபிரானை அடைந்து; வைய நாதன்- உலகத்தின் நாயகனாகிய அந்தப் பெருமானது; சரணம் வணங்கி - திருவடிகளைத் தொழுது; யோசனை ஈண்டு ஒரு நூறு - நூறு யோசனை நீளம் உடையதாகவும், இவை ஐயிரண்டின் அகலம் - பத்து யோசனை அகலம் கொண்டதாகவும்; அமைந்திடச் செய்ததால் அணை - அமைந்ததாக அணை கட்டி முடிக்கப்பட்டது; என்பது செப்பினார் - என்ற செய்தியை இராமபிரானிடம் சொன்னார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having come to him, 'A hundred yojanas in length here,
- and twice five in breadth, so it has been made:
- the causeway is done,' they declared,
- bowing at the feet of the Lord of the world.
What the poem says
The bridge-building chapter ends. The leaders bow at Irāmaṉ's feet, lord of the world, and report that the work is finished.
The causeway runs a hundred yojanas long and ten yojanas wide, joining the mainland to Ilaṅkai.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyti 'yōcaṉai īṇṭu oru nūṟu ivai
ai iraṇṭiṉ akalam amaintiṭac
ceytatāl aṇai' eṉpatu ceppiṉār
vaiya nātaṉ caraṇam vaṇaṅkiyē.