கம்பராமாயணம் 6789 · யுத்த 8.1

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்தகையும், அன்பினொடு தான் இடை எழுந்தே
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி
ஈண்ட எழுக என்றனன்; இழைத்த படியெல்லாம்
காண்டல் அதன் மேல் நெடிய காதல் முதிர்கின்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆண்தகையும் - ஆண்மைக்குரிய பண்பெலாம் அமைந்த இராமபிரானும்; காதல் அமிழ்து ஊற - பேரன்பு எனும் பெறலரும் அமிழ்தம் ஊற்றாய்ச் சுரக்க; அவரை - (சேதுவைச் சமைத்து விட்ட நற் செய்தியை வந்து கூறிய) அந்தச் சுக்கிரீவன் முதலானோரை; நெஞ்சினொடு நீண்ட கையினால் அன்பினொடு புல்லி - நெஞ்சாரத் தன்னுடைய நீண்ட (தாள்தோய் தடக்) கைகளால் அன்புமிக ஆரத்தழுவி; இழைத்த படி எல்லாம் - சேதுவைச் சமைத்துள்ள திறனையெல்லாம்; காண்டல் அதன் மேல் - காண்பதின் மேலே; நெடிய காதல் முதிர்கின்றான் - ஆசை மிக உற்றவனாய் (சேதுவைக்காண) எல்லோரும் விரைந்து எழுவீர்களாக; என்றனன் - என்று கூறினான்.

ஈண்ட - விரைய. 'இடுக்கண் களைதற்கு ஈண்டெனப் போகி' (சிலப். 13.101) எனச் சிலம்பிலும் காணலாம். அமிழ்து உயிர்தளிர்ப்பச் செய்து, சாவாமைக்குக் காரணம் ஆவது போல், காதல் அன்பும் ஆவதால், 'காதல் அமிழ்துஊற' என்றார். மூன்று நாளில் கடலுக்கு அணைகட்டி முடிக்கப்பட்டது (6799) செயற்கருஞ்செயல் ஆதலின் இராமபிரான் பாராட்டுகிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And that hero among men, as love welled up in him like nectar,
  2. with his long arms clasped them to his heart in affection
  3. and said, 'Rise quickly!', growing ever more eager
  4. to see all that they had made.

What the poem says

The chapter 'Hearing the Spies' begins. Irāmaṉ, the perfect man, receives Cukkirīvaṉ and the others who have brought news that the causeway is finished. Love wells up in him like the nectar of immortality, and he embraces them with his long arms.

Eager to see their work for himself, he tells them all to get up quickly and come. Building a bridge across the sea in three days was a feat beyond doing, and he praises them for it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇtakaiyum, aṉpiṉoṭu kātalamiḻtu ūṟa
nīṇṭa kaiyiṉāl avarai neñciṉoṭu pulli
īṇṭa eḻuka eṉṟaṉaṉ; iḻaitta paṭi ellām
kāṇṭalataṉmēl neṭiya kātal mutirkiṉṟāṉ.