கம்பராமாயணம் 6790 · யுத்த 8.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்ட முதல்வன் - உலகம் யாவுக்கும் முதல்வனாகிய இராமபிரான்; பண்டை உறையுட்கு எதிர் - (தனது) பழைய வாழிடமான கடலுக்கு எதிராக; படைக்கடலின் வைகும் கொண்டல் என வந்து - தனது வானர சேனையாகிய கடலின்மேல் (வந்து) படியும் மேகம் எனும்படி வந்து; அவ்அணையைக் குறுகி நின்றான் - அந்த அணையைக் கிட்டி நின்று; ஒரு தன் ஆவி அனையாளை - ஒப்பற்ற தன் உயிர் போன்றவளான பிராட்டியை; கண்டனன் என - நேரிற் கண்டுவிட்டவனைப் போன்று; பெரிய காதல் முதிர்கின்றான் - மிகுந்த காதல் முற்றியவன் ஆனான்.
அண்ட முதல்வன் - உலகங்கட்கு எல்லாம் முதல்வன். 'ஆதி பகவன் முதற்றே உலகு' (குறள். 1) என்பார் வள்ளுவர். "ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை" (4025) என்று, முன்னரும் சீதையைக் குறித்தது நினைக. மேகம் கடலிடை நீருண்ணக் கவியும் என்பது மரபு. "கருணையம் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி" (கம்ப. 6593) என்பார் வருணனை வழி வேண்டு படலத்திலும். "கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று; அதற்காக, ஒரு கடல் ஒருகடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற் போலே இருக்கை; "கருணையம் கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி" என்னும்படி அன்றோ" (திருவாய் ஈடு 6:9:3) எனக் கம்பர் பெருமானின் இக் கருத்தழகில் ஈடுபட்ட ஈட்டுரையாளர் நம்பிள்ளை, கம்பரின் இவ்வடியினையே எடுத்துக் காட்டியுள்ள திறம் ஓர்க. சீதையை விரைவில் அடைய உதவும் வாயில் இது ஆதலின், இதனைக் கண்டதும் சீதையைக் கண்டது போல் ஆயிற்று என்பார் 'ஆவியனையாளைக் கண்டனன் என' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Facing his ancient dwelling, like a cloud that settles
- on the sea of his army, he came and stood close to that causeway;
- the First Lord of the cosmos, as if he had seen
- her who was his very life, was filled with deep longing.
What the poem says
Irāmaṉ, the First Lord of the universe, comes and stands by the causeway. As Viṣṇu his ancient home is the ocean, which he now faces. Surrounded by his army, he looks like a dark rain cloud settling on a sea, as clouds were thought to come down to the sea to drink.
The bridge is the road that will bring him to Cītai, so seeing it is almost like seeing her, and his longing for her swells. A medieval commentator on the Tiruvāymoḻi quotes the poet's earlier line about Irāmaṉ lying before the sea, 'one ocean jealous of another'.