கம்பராமாயணம் 6791 · யுத்த 8.3

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நின்று, பெரிது உன்னி, இந் நெடுங்கடல் நிரம்பக்
குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை,
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான்
என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்? என்றான்.

பொருள் · Meaning in Tamil

நின்று நெடிதுஉன்னினன் - (இராமன் அணையின் அருகே) நின்று, நெடுநேரம் சிந்தித்தவனாய், நெடுங்கடல் நிரம்ப - நீண்ட அக்கடல் நிரம்புமாறு; குன்று கொடு அடைத்து - மலைகளைக் கொண்டு அடைத்து; அணை குயிற்றியது ஓர் கொள்கை - அணையை அமைத்தது (ஆகிய) ஒப்பற்ற (இச்) செயற்பாடு; அன்று - முன்பு; உலகு தந்த முதல் அந்தணன் - உலகினைப் படைத்த முதல்வனாகிய பிரமதேவனே; அமைத்தான் என்ற பொழுதின் கணும் - (இதனைச் செய்யத் தொடங்கினான்) என்றாலும்; இது என்று இயலும் என்றான் - இது எப்போது கை கூடும் என்று வியந்து கூறினான்.

குயிற்றுதல் - செய்தல். நான்முகன் சிற்பக் கலையில் சிறந்தான் என்பதனை முன்பும் (கம்ப. 4862) கூறியது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He stood and pondered long: 'This feat of filling the long sea,
  2. blocking it with mountains and building a causeway:
  3. even if one said the first Brahmin who brought forth the world long ago
  4. had built it, when could it ever have been done?' he said.

What the poem says

Irāmaṉ stands and gazes for a long time, lost in thought, then speaks his amazement.

To fill the sea with mountains and build such a bridge across it is so great a work that even if Brahmā, the creator, the first Brahmin, a master of craftsmanship, had set out to do it, one would wonder when he could ever finish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟu, neṭitu uṉṉiṉaṉ, neṭuṅ kaṭal nirampak
kuṉṟukoṭu aṭaittu, aṇai kuyiṟṟiyatu ōr koḷkai,
aṉṟu ulaku tanta mutal antaṇaṉ amaittāṉ
eṉṟa poḻutiṉkaṇum itu eṉṟu iyalum? eṉṟāṉ.