கம்பராமாயணம் 6792 · யுத்த 8.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊழி முதல்வன் - ஊழிக்காலங்களின் தோற்றத்திற்கும் முடிவுக்கும் காரணன் ஆகின்ற பரம் பொருளான இராமபிரான்; வியப்பினொடு உவந்தான் - வியப்பும் உவகையும் ஒருங்கடைந்தவனாகி; ஆழம் உரை செய்யும் அளவே! - (இக்கடலின் ஆழம்) உரைக்கவல்ல அளவினதோ! இனி அது ஒன்றோ? - இவ் வாழம் ஒன்று மட்டுமோ?; ஆழியின் இலங்கை பெரிது - இக்கடலால் சூழப் பெற்ற இலங்கை ஆகிய பெரிய நகரம்; அத் திசையது ஆமேல் - (ஏழுகடலுக்கும்) அப்பாற்பட்டது ஆனாலும்; இவர் ஏழு கடலும் கடிது அடைப்பர் என்றான் - இவ்வானரர்கள், அந்த ஏழு கடல்களையும் விரைவில் அடைத்து அணையமைத்துவிடுவர் என்று (வியப்போடு) கூறினான்.
யுகங்கள் முடிவதற்கும் தோன்றுவதற்கும் பரம்பொருளே காரணப் பொருளாதலின், 'ஊழி முதல்வன்' என்றார். இராமனை முன்பு 'ஊழியார்' (3789) 'ஊழியின் ஒருவனும்' (7585) என்பதும் காண்க. வியப்பு, புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின் அடியாகப் பிறக்கும். (தொல். மெய்ப். 7) இங்கு அணையைக் கண்ட இராமன் அதன் புதுமை, பெருமை, ஆக்கம் எனும் மூன்றாலும் வியப்படைந்தான். அதனைச் சமைத்த வானரங்களின் உருவச் சிறுமையாலும் வியப்படைந்து உவந்தான் என்பார், 'வியப்பினோடு உவந்தான்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Lord who is first of the ages rejoiced in wonder:
- 'Can its depth even be put into words? And is that all?
- If great Ilaṅkai in the sea lay out beyond them,
- these would swiftly block all seven seas!' he said.
What the poem says
Irāmaṉ, the supreme being who begins and ends the ages, is both astonished and delighted.
The depth of the sea they have filled is beyond telling, and that is not the end of it. If Ilaṅkai lay beyond all seven oceans of the world, he says, these monkeys would quickly dam every one of them. Classical Tamil poetics names novelty, greatness, smallness and abundance as the sources of wonder. Here the bridge's novelty, greatness and abundance, and the small size of the monkeys who built it, all move him.