கம்பராமாயணம் 6793 · யுத்த 8.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெற்றியின் அரக்கர் பதிசெல்ல - (படையின்) முன் முனையில் அரக்கர் மன்னனாகிய வீடணன் செல்லவும்; நிறை நல்நூல் கற்று உணரும் மாருதி - நிறைந்த சிறப்புற்ற நூல்களைக் கற்றுத் தெளிந்து உணர்ந்த அநுமன்; கடைக் குழை வர- சேனையின் பின்முனையிற் செல்லவும்; தன் வெற்றி புனை தம்பி - தனக்கு வரும் வெற்றியையே தன் அணியாகக் கொள்ளும் தம்பியாகிய இலக்குவன்; ஒரு பின்பு செல - தனக்குப் பின்பு ஒரு பக்கமாகச் செல்லவும்; வீரப் பொன் திரள்புயம் - வீரம் மிக்க அழகிய திரண்ட கைகளையுடைய; கருநிறக் களிறு போனான் - கரிய நிறம் பெற்ற ஆண்யானை போன்றவனான இராமபிரான் சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the lord of the Arakkars going at the front, and Māruti,
- who has learned and understood the full and noble books, coming at the rear,
- and his brother, who wears victory as an ornament, walking just behind him,
- the dark tusker with heroic, golden, rounded shoulders went forth.
What the poem says
The army sets out across the causeway in order of march. Vīṭaṇaṉ, now lord of the Arakkars, leads the way. Aṉumaṉ, son of the Wind and deeply learned, guards the rear.
Ilakkuvaṉ, who wears victory like an ornament, walks close behind Irāmaṉ. Irāmaṉ himself moves forward like a dark bull elephant, with broad, strong shoulders.