கம்பராமாயணம் 6795 · யுத்த 8.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓதிய - (தொல்காப்பியம் முதலான தொல்நூல்களில் பகுத்து) ஓதப் பெற்ற, குறிஞ்சி முதலாய - குறிஞ்சியை முதலாகக் கொண்ட; நிலன் உள்ள- ஐவகை நிலங்களிலும் உள்ள; கோது இல - குற்றம் இல்லாத; அருந்துவன - உணவாக உட்கொள்ளும் உணவுப் பொருள்களையெல்லாம்; கொள்ளையின் முகந்து - மிகுதியாக அள்ளிக் கொண்டு; யாதும் ஒழியா வகை சுமந்து - மீதியில்லாதவாறு அனைத்தையும் சுமந்து கொண்டு; கடல் எய்தப் போதலினும் - கடலையடையச் செல்லுதலாலும்;அன்ன படை - அந்த வானரப் (பெருஞ்) சேனையை; பொன்னி எனல் ஆகும் - காவிரி என்று கூறுதல் தகும்.
சென்ற பாடலில், காவிரியை உவமித்த கவி, இன்னும் மனம் ஆராமையின், இன்னொரு முறையிலும் அச்சேனை காவிரி போன்றது என மேலும் காவிரியை உவமித்து மகிழ்தலால், காவிரியின் மேல், கவிஞர் பெருமான் வைத்துள்ள பேரன்பின் பெருமை புலனாம். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐவகை நிலப்பாகுபாடும், அவற்றில் வாழும் மக்களைப் பாடுபொருளாகக் கொண்ட அகம் புறப் பொருளும் தமிழ் நாட்டுக்கே உரியவையென உலக இலக்கியச் சான்றோர் ஒரு முகமாகப் புகழ்தலின் 'ஓதிய குறிஞ்சி முதலாய' என்றார். ஓதுதல் - புகழ்ந்து பாடுதல். அருந்துவன - வினையாலணையும் பெயர். வானர சேனைக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் மிகுதியாகக் கொண்டு செல்லப்பட்டன என்பதைப் போகிற போக்கில் உவமை வாயிலாக உரைத்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Scooping up in plenty the flawless foods
- found in all the lands, beginning with the hills, that the books describe,
- and carrying them so that nothing was left behind, as it went on to reach the sea,
- in this way too that army could be called the Poṉṉi.
What the poem says
Not yet satisfied with one comparison, the poet likens the army to the Kāviri, also called Poṉṉi, a second time, a sign of his love for the river.
The Kāviri gathers up the good things of every landscape the old poets describe, from the hills down to the coast, and carries them to the sea. In the same way the army carries along huge stores of food from all those regions. In passing, the poet tells us the army was well supplied.