கம்பராமாயணம் 6796 · யுத்த 8.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயது - அந்த வானர சேனையில்; நெருங்க அடிஇட்டு - நெருக்கத்தினால், ஓர் அடியை இட்டு; அடி இடாமல் - அடுத்த அடியை எடுத்துக் கீழே வைப்பதற்கு இயலாமல் (இன்னொருவரின் அடியிடப்படுதலால்); நெறிதேயும் - (செல்ல) வழியின்றிப் போகும்; மாடுதிரை ஊடு - (ஆதலால்) அருகேயுள்ள கடல் அலைகளின் இடையே; விசை செல்ல - விரைவாகச் செல்ல; சில போய - சில வானரங்கள் போயின; பொங்கு தொறு பொங்கு தொறு - (அப்படிச் சென்ற வானரங்கள்) கடல் அலைகள் பொங்கி எழுந்தோறும் எழுந்தோறும்; பூசல் பாய்புரவி - போரில் பாய்கின்ற குதிரைகள்; விண் படர்வ போல் - வானை நோக்கிப் பாய்வது போல; இனிது பாய்வன - இனிதாகத் தாவிச் செல்வன ஆயின.
வானர சேனையின் நெருக்க மிகுதியை உரைத்தவாறு. "அணையிடமில்லாமல், கடலுக்குள்ளே போகின்ற வானரங்கள் திரை பொங்குந்தோறும் குதிரை ராவுத்தர் ஒத்தன" என்பது நயமான ஒரு பழைய உரை. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Packed so tight that once one foot was down the next could not be set,
- on the path that wore away beside them, some went swiftly through the waves;
- and every time the sea swelled, and swelled again, they leapt
- gladly, like war horses springing into the sky.
What the poem says
The causeway is so crowded that a monkey can put one foot down but has no room for the next. So some leave the bridge and plunge into the waves alongside.
Each time a wave swells under them they leap up joyfully, like cavalry horses springing into the air in battle. An old commentary compares them to horsemen riding the waves.