கம்பராமாயணம் 6797 · யுத்த 8.9

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மெய் இடை நெருங்க வெளி அற்று அயலில் வீழும்
பொய்யிடம் இலாத புனலில் புகல் இலாத
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கை இடை கொடுப்ப வழிசென்ற கரை இல்லை.

பொருள் · Meaning in Tamil

மெய்யிடை நெருங்க - (போய வழியெல்லாம்) குரங்குகளின் உடம்பே இடம் முழுதும் நிறைந்திருத்தலால்; வெளியற்று - செல்லும் வெற்றிடம் அற்று; அயலில் வீழும் பொய் இடம் இலாத - பக்கத்தில் வீழ்வதற்கும் காலியிடம் பெறாதனவாய்; புனலின் புகல் இலாத - (நெருக்கில் சிக்குண்டு கடல்) நீரிலும் விழ முடியாதனவாய் ஆகிய சில வானரங்களை; உய்விடம் அளிக்கும் அருளாளர் - பிழைக்கும் இடம் காணாது தவிக்கும் அவற்றிற்கு அவ்விடம் காட்டிச் சில அருட் பண்பு வாய்ந்த குரங்குகள், நீட்டிய; கையினிடை முறை உய்த்தார்- கைகளின் மீதே அவற்றைச் செல்லுமாறு செலுத்தினர்; சென்று கரைகண்ட - (இவ்வாறு, அவற்றின் கையின்மேலே) சென்று கரையினையடைந்த வானரங்கட்கு; கரை இல்லை - ஓர் எல்லை இல்லை.

எங்கு நோக்கினும் குரங்குகளின் உடல்கள் நெருக்கி நின்றன. இடையிற் சிக்கிய சில குரங்குகள் கீழேயே, கடலிலேயோ வீழ்வதற்கும் இயலாதவாறு நடுவில் தவித்தன என்பார், "அயலில் வீழும் பொய் இடம் இலாத, புனலின் புகல் இலாத" என்றார். பொய் இடம் - காலியிடம். குரங்குகள் கை என்பதற்கு ஒழுக்கம் என்பதும் பொருளாதலால், பிறவிக் கடற்பட்டோர் அருளாளர்காட்டும் ஒழுக்க நெறியில் சென்று கரையேறலாம் என்பதும் தோன்ற, "அருளாளர் முறை உய்த்தார் கையிடை கொடுப்ப" எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bodies so packed that no gap was left, with no empty space
  2. to fall into at the side and no way into the water,
  3. those trapped were passed along by kindly ones who gave them a way to safety,
  4. carried on their hands; those who reached the shore that way were beyond counting.

What the poem says

The crush on the causeway is so great that some monkeys are wedged in the middle. They cannot step aside, and cannot even drop into the sea.

Kind-hearted monkeys pass them along over their raised hands, and countless monkeys reach the far shore this way. The word kai means both 'hand' and 'right conduct', so the verse also hints at a spiritual meaning: people drowning in the sea of rebirth reach the far shore by the path that the compassionate show them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1meyyiṭai neruṅka veḷiyaṟṟu ayalil vīḻum
poy iṭam ilāta puṉaliṉ pukal ilāta
uyviṭam aḷikkum aruḷāḷar muṟai uyttār
kaiyiṉiṭai ceṉṟu, karai kaṇṭa karai illai.