கம்பராமாயணம் 6798 · யுத்த 8.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இழைத்து அனைய - (நவமணிகளை இழைத்தாற்போன்ற); வெங் கதிரின் வெஞ்சுடர் - சூரியனுடைய கடுமையான வெயில்; இராமன் - இராமனுடைய; மழைத்த முகில் அன்ன - சூல் கொண்ட மேகம் போன்ற; மேனி வருடாமல் - திருமேனியைத் தீண்டாதவாறு; தழைத்த - நன்கு தழைத்துள்ளதனால்; நிழல் உற்ற - நிழல் மிகுந்த; சந்தனம் - சந்தன மரங்களையும்; உயர்ந்த வழைத் தரு - உயர்ந்தோங்கிய சுரபுன்னை மரங்களையும், எடுத்து - பறித்துக் (கைகளில் ஏந்தியவாறு); அநேகர் அருகுவந்தனர் - வானரங்களிற் பலர் (குடைபிடித்தவாறு) அருகே (சூழ்ந்து) வந்தார்.
"அழைத்தவையெடுத்து அருகு சென்றனர்" எனப் பாடங் கொண்டு, "சுவாமி திருமேனியிலே கொம்புகள் படாமல், முன்னே கரங்களினாலே விலக்கிப் போனார்கள்" என்று பழைய உரை கூறுவதும் நயமாக உள்ளது. மரங்களோடு கூடிய மலைகளைச் சேது சமைக்க இட்டதை, "மாமுதல் தருவோடு ஓங்கும் வான் உயர் குன்றம்" (கம்ப. 669/) முதலிய பாடல்களில் சேதுபந்தனப் படலத்துள் குறிப்பிடுவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the fierce glare of the hot sun, as if inlaid with jewels,
- should not touch Irāmaṉ's gem-like body, dark as a rain-laden cloud,
- many came near him carrying cool sandal trees
- thick with shade, and tall surapuṉṉai trees.
What the poem says
As Irāmaṉ crosses, many monkeys walk close around him holding up leafy sandal trees and tall surapuṉṉai trees as parasols. They keep the harsh sunlight off his dark body, which is the colour of a rain cloud.
An older reading has the monkeys walking ahead and pushing branches aside with their hands so that none would brush against him.