கம்பராமாயணம் 6799 · யுத்த 8.11

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓம நெறிவாணர் மறை வாய்மை ஒருதானே
ஆம் அரசன் மைந்தர் திருமேனி அலசாமே
பூ மரன் இறுத்தவை பொருத்துவ பொருத்திச்
சாமரையின் வீசினர் படைத் தலைவர் தாமே.

பொருள் · Meaning in Tamil

ஓம நெறி வாணர்- வேள்வி நெறியால் வாழ்கின்றவர் ஆகிய அந்தணர்களின்; மறை வாய்மை ஒருதானே ஆம்- நான் மறைகளில் உரைக்கப்படும் வாய்மையின் வடிவம், தான் ஒருவனேயான; அரசன் மைந்தர் - தயரதமன்னனின் மக்கள் ஆகிய இராம இலக்குவருடைய; திருமேனி அலசாமே - அழகுத் திருவுடல்கள் வருந்தாதவாறு; பூமரன் இறுத்து - பூக்கள் பொதிந்த மரங்களை ஒடித்து; அவை பொருந்துவ பொருத்தி - அவற்றின் பூக்களைச் சாமரைக் கேற்றவாறு இணைத்து; படைத்தலைவர் தாமே - சேனைத் தலைவர்களே; சாமரையின் வீசினர் - சாமரையாக வீசினர்.

தயரதனின் வாய்மைத் திறம் முன்னும் (2434, 4018) கூறப்பட்டுள்ளது. அரசர்க்குச் செய்யும் சிறப்புக்களுள், குடைகவித்தலும், சாமரையிரட்டலும் சிறந்தவையாதலின், மேற்பாடலில் குடை கவித்தமை கூறி, இதில், சாமரம் வீசுதல் கூறியவாறு. கவரிமான் கற்றையால் ஆன சாமரத்திலும், வானரர்கள் இயற்றிய நறுமண மலர்ச் சாமரை மணம் மிக்கதாதல் அறிக. பெருமானுக்குச் சாமரம் வீசுதல் பெரும் பேறு ஆதல் உணர்ந்து, பணியாளரிடம் தாராமல், படைத் தலைவர்களே வீசி மகிழ்ந்தனர் என்பார் "சாமரையின் வீசினர் படைத் தலைவர்தாமே" என்றார். ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the fair bodies of the sons of the king who alone
  2. was the very truth of the Vedas of those who live by the sacrificial fire should not grow weary,
  3. they broke off flowering trees, fitted the blooms together,
  4. and the army's commanders themselves waved them as fly-whisks.

What the poem says

After the parasol in the last verse comes the other royal honour, the fly-whisk. Irāmaṉ and Ilakkuvaṉ are sons of Tacarataṉ, a king so devoted to truth that he embodied the truth of the Vedas.

To spare the princes discomfort, the monkeys bind flowering branches into fans that smell sweeter than any yak-tail whisk. Serving Irāmaṉ this way is such a privilege that the army commanders do it themselves rather than leave it to attendants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōma neṟi vāṇar maṟai vāymai oru tāṉē
ām aracaṉ maintar tiru mēṉi alacāmē
pū maraṉ iṟuttu, avai poruntuva porutti,
cāmaraiyiṉ vīciṉar paṭait talaivartāmē.