கம்பராமாயணம் 6800 · யுத்த 8.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருங்கடகம் - (பெண்மையின் மங்கலப் பொருள்களுள் ஒன்றான) அரிய வளையல்களை; அம் கையில் அகற்றி - அழகிய கைகளிலிருந்தும் அகற்றி; மருங்கு அட வளர்ந்த முலைமங்கை - சிற்றிடை ஒடியும் என்றஞ்சுமாறு வளர்ந்துள்ள மார்பகங்களையுடையவளும் ஆகிய சீதையினுடைய; அயர்வோடும் மணம் முன்னா - கூட்டத்தைப் பிரிவால் தளர்ந்துள்ள மனத்தால் எண்ணியவாறு; ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் - (உலகையெல்லாம்) ஒருங்கே வென்றுயரச் செல்வது போன்று செல்லும் வானரப் படையோடு; ஓதத்து இருங்கடல் கடந்து - அலைசூழும் அப்பெரிய கடலைச் (சேதுவினால்) கடந்து; இராமன் கரையேறினன் - இராமபிரான் கரையேறினான்.
சீதை துயர்க்கடலையெண்ணி அவளைக் கரையேற்ற எண்ணி வந்தவன், கரையேறினான் என்பதாம். முன்னா - முன்னி, நினைத்து. செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். "கண்ணின் நீர்கடல் புகக் கலுழ்வான் ஆயின" (5075). அவளை துயரக் கடலிலிருந்து கரையேற்ற முதல் அடி இடுவானாய்த் தென் கடலிலிருந்து தரையில் அடி வைத்தான் இராமன் என்பார் "இருங் கடல் கடந்து கரை ஏறினான் இராமன்" என மொழிந்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking, in his weariness, of union with the maiden who had put away
- the precious bangles from her lovely hands, whose breasts had grown so as to strain her waist,
- with his spreading army, mighty and lofty, all together,
- Irāmaṉ crossed the vast surging sea and stepped ashore.
What the poem says
Irāmaṉ reaches Ilaṅkai. All the way across, weary with grief, he has been thinking of being reunited with Cītai, who in her sorrow has taken off her bangles, the ornaments a married woman wears for good fortune.
He has crossed the ocean and stepped onto the shore. His first step on land is also the first step toward lifting Cītai out of her own ocean of grief.