கம்பராமாயணம் 6801 · யுத்த 8.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெருந்தவம் முயன்று - பெரிய தவங்களை முயற்சியோடு புரிந்து; அமரர் பெற்றிடும் வரத்தால் - தேவர்கள் பெற்ற வரத்தின் பயனாக; மருந்து அனைய தம்பியொடும் - அமுது போல் (விரும்பும் நலத்தைத் தருபவனாகிய) தம்பி இலக்குவனோடும்; வன்துணைவரோடும் - ஆற்றல்மிக்க நண்பர்களுடனும்; அருந்ததியும் வந்தனை செய் - கற்பில் மிக்க அருந்ததியும் வணங்கிடத் தக்க; அஞ்சொல் இள வஞ்சி - அழகுமொழி பேசும் இளைய வஞ்சிக் கொடி போன்றாளுமாகிய சீதாதேவி; இருந்த நகரின் புறன் - சிறையிருந்த இலங்கை மாநகரின் புறத்தே (உள்ள); ஓர் குன்றிடையிறுத்தான் - ஒருகுன்றின் அருகில் சென்று (இராமன்) தங்கினான்.
அமரர் பெருந்தவம் முயன்று பெற்றிடும் வரத்தால் தங்கினான் என்க. இறுத்தல் - தங்குதல். "சேக்கையின் அரவின் நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியமுடைமையன்றோ?" (3293) எனவும், "அண்டா! ஐயா? எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்" (8661) எனவும் வருதல் காண்க. இராமன் இறக்க நினைக்கும் அளவு வேதனைமிக்க காலத்தும் உடனிருந்து சோர்வு நீக்கி வாழ்வித்தவன் ஆதலின் இலக்குவன், "மருந்தனைய தம்பி" ஆயினான். "மருந்தனைய தங்கை" (3324) எனவும், "மருந்தனைய தேவி" (5350) என வருமிடங்களையும் நோக்குக. இங்குக் கூறிய குன்று சுவேல மலை. "இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து" (10089) என்ற மீட்சிப் படலப் பாடல்காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the boon the gods had won through great penance and effort,
- with his brother, who was like life-giving medicine, and his strong companions,
- outside the city where the young creeper of sweet speech dwelt, she whom even Aruntati reveres,
- he made camp upon a hill.
What the poem says
Irāmaṉ halts on a hill outside Ilaṅkai, the city where Cītai is held captive. This is Mount Cuvēlam. With him are Ilakkuvaṉ, who has been like medicine to him, reviving him when grief nearly killed him, and his mighty allies.
Cītai is called a young creeper, sweet of speech, honoured even by Aruntati, the model of wifely virtue. That Irāmaṉ has come this far is the fruit of the gods' long penance, since his descent to earth was in answer to their prayers.