கம்பராமாயணம் 6802 · யுத்த 8.14

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீலனை இனிது நோக்கி, நேமியோன், ‘விரைய ‘நீ நம்
பால்வரு சேனைக்கு எல்லாம் இழைத்தியால் பாடி ‘என்னக்
கால்வரை வணங்கிப் போனான், கல்லினால் கடலைக் கட்டி,
நூல்வரை வழி செய்தானுக்கு அந் நிலை நொய்திற் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

நேமியோன் - சக்கரப் படையேந்திய திருமாலின் அவதாரமான இராமபிரான்; நீலனை இனிது நோக்கி - நீலன் எனும் வானரப் படைத் தலைவனை இனிமையுற நோக்கி, நீ நம் பால் வருசேனைக்கு எல்லாம் - 'நீ நம்முடன் வந்துள்ள சேனைகட்கு எல்லாம்; பாடி விரைய இழைத்தி என்னா - (தங்குவதற்குப்) பாடிவீடுகளை விரைய அமைப்பாயாக' என்று பணித்திட; கால் வரை வணங்கிப் போனான் - (அவன், பெருமானது) திருவடிகளில் வீழ்ந்து வணங்கிச் சென்று; கல்லினால் கடலைக்கட்டி - மலைகளைக் கொண்டு கடலுக்கு அணையினைக் கட்டி; நூல்வரை வழிசெய்தானுக்கு - சிற்ப நூல்களின் இலக்கணப் படி நின்று, இலங்கைக்கு வழி செய்து கொடுத்தவனாகிய நளனிடம்; அந்நிலை நொய்தின் சொன்னான் - அப் பணியினை நொடிப் பொழுதில் சொன்னான்.

போனான் - முற்றெச்சம். நேமி - சக்கரம். நொய்து - ஆகுபெயராய் நொடியைக் குறித்தது. 'வரை' இரண்டில், முன்னது இடத்தையும் பின்னது முறையையும் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bearer of the discus looked kindly at Nīlaṉ and said, 'Quickly,
  2. build a camp for all the army that has come with us';
  3. he bowed at his feet and went, and to the one who bound the sea with stone
  4. and made the road by the rule of the books, he told that task at once.

What the poem says

Irāmaṉ, Viṣṇu who bears the discus, kindly asks the commander Nīlaṉ to set up quarters at once for the whole army.

Nīlaṉ bows at his feet and passes the order straight to Naḷaṉ, who bound the sea with stone and laid the road to Ilaṅkai according to the rules of the building manuals.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīlaṉai iṉitu nōkki, nēmiyōṉ, ‘viraiya ‘nī nam
pāl varu cēṉaikku ellām iḻaittiyāl pāṭi ‘eṉṉā,
kālvarai vaṇaṅkip pōṉāṉ, kalliṉāl kaṭalaik kaṭṭi,
nūl varai vaḻi ceytāṉukku an nilai noytiṉ coṉṉāṉ.