கம்பராமாயணம் 6803 · யுத்த 8.15

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன்னினும் மணியினாலும் நான்முகன் புனைந்த பொற்பின்
நல் நலம் அமைய வாங்கி, நால்வகைச் சதுரம் நாட்டி,
இன்னர் என்னாத வண்ணம் இறைவற்கும் பிறர்க்கும் எல்லாம்
நல்நகர் நொய்தின் செய்தான்; தாதையும் நாணுக் கொண்டான்.

பொருள் · Meaning in Tamil

நல் நலமாக வாங்கி - மிக நன்மை உண்டாகுமாறு இடத்தைப் பிரித்து; நால்வகைச் சதுரம் நாட்டி - நான்கு வகைச் சதுரமுமாக நிறுவி; இன்னர் என்னாத வண்ணம் - இப்படை வீட்டில் இருத்தற்குரியர் இவர்தாம் என்னாதவாறு; இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் - சுக்கிரீவன் முதலிய தலைவர்க்கும் மற்றுமுள்ள வானரப் படைகட்கும்; நான்முகன் - சதுர் முகப் பிரமனாலே; பொன்னினும் மணியினானும் புனைந்த பொற்பின் - பொன்னாலும் மணியாலும் படைக்கப்பட்டவை போன்று (நளன்) சிறந்தபாசறையை மிக எளிதில் செய்து முடித்தான்; தாதையும் நாண்உட் கொண்டான் - (அதுகண்டு) (அவனுடைய) தந்தையாகிய விச்சுவ கன்மாவும் (இத்தகு ஆற்றல் நமக்கில்லையே) என்று எண்ணி நாணம் கொண்டான்.

கட்டிட அமைதி கொண்டு, இவை இவை யார் யாருக்குரியன என்று ஊகிக்க இயலாவாறு அனைத்துப் பாடி வீடுகளும் அனைத்து வசதிகளும் பொருந்த அமைக்கப் பட்டனவாதலின், "இன்னர் என்னாத வண்ணம்" என்றார். நொய்து - விரைவு. இங்கு மகன், தந்தை யறிவினும் விஞ்சி நிற்பதனால், "தாதையும் நாண் உட்கொண்டான்" என்றார். பெருமிதத்தால் வந்த நாணம் இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a beauty as if four-faced Brahmā had wrought it in gold and gems,
  2. he laid out the ground for the greatest good, set out the four kinds of square,
  3. and so that none could say 'this is for these', for the lords and for all the others
  4. he quickly built a fine city; and even his father felt shame.

What the poem says

Naḷaṉ lays out the camp on a careful plan of squares. It is as splendid as if Brahmā had made it of gold and jewels.

Every quarter is so well furnished that no one could tell which lodgings were meant for the leaders and which for the ordinary soldiers. Naḷaṉ's father, Vicuvakarmā, the divine architect, is put to shame at being outdone by his son, though it is the kind of shame a proud father feels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉṉiṉum maṇiyiṉāṉum nāṉmukaṉ puṉainta poṟpiṉ
nal nalam āka vāṅki, nāl vakaic caturam nāṭṭi,
iṉṉar eṉṉāta vaṇṇam iṟaivarkkum piṟarkkumellām
nal nakar noytiṉ ceytāṉ; tātaiyum nāṇ uṭkoṇṭāṉ.