கம்பராமாயணம் 6804 · யுத்த 8.16

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வில்லினாற்கு - கோதண்ட வில்லினை ஏந்திய இராமபிரானுக்கு; இருக்கை செய்யும் விருப்பினால் - இருப்பிடம் அமைக்க எழும் ஆசையினால்; பொருப்பின் வீங்கும் கல்லினால் - மலைகளில் உள்ள பருத்த கற்களால்; கல்லை ஒக்கக் கடாவினான் - கற்களை நொறுக்கிச் சமப்படுத்தி; கழைகள் ஆன நெல்லினால் - கழைகள் எனும் பெயர் கொண்டுவிட்ட நெல் இனத்தைச் சார்ந்த மூங்கில்களால்; அலக்கும் காலும் நிரப்பினான் - வரிச்சலும் காலும் ஆக நிறைத்து; தருப்பை என்னும் புல்லினால் தொடுத்து - தருப்பை என்று கூறப்படும் புற்களால் வரிசையுறக் கட்டி; வாசப் பூவினால் வேய்ந்து போனான் - நறுமணம் மிக்க பூக்களால் மேற்கூரையை வேய்ந்து பர்ண சாலையை முடித்தான் (நளன்).

தவவாழ்வுடையார் மலையிலே, கானகத்திலோ வாழ விரும்புவர் ஆதலின், இராமபிரானுக்கு சுவேல மலை மீதே இருக்கையமைக்க விரும்பி, அங்குள்ள பெருங்கற்களையே கருவியாகக் கொண்டு கற்களைத் தூளாக்கி நிலத்தை முதலிற் சமப்படுத்தியமையை, "பொருப்பின் வீங்கும் கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான்" என்றார். பூனையின் பேரினம் புலியானாற் போல, நெல்லின் பேரினம் மூங்கில். அரசப் பொறுப்புடையரான சுக்கிரீவன், வீடணன் முதலியோர்க்கு, பொன்னினும் மணியினும் மாளிகைகள் அமைத்தான் நளன். தவக்கோலம் தாங்கியுள்ள இராமபிரானுக்கு அவ் வாழ்வுக்குரிய இருக்கையாகப் பன்னக சாலையியற்றி வாழவைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Longing to make a dwelling for the Bowman, he pounded
  2. rock level with the swelling rocks of the mountain; with bamboo, that grass
  3. of the rice kind, he filled in the laths and posts; he bound it with the grass
  4. called darbha, and roofed it over with fragrant flowers.

What the poem says

For Irāmaṉ, Naḷaṉ builds something quite different. Irāmaṉ is still living as a forest ascetic, so instead of a palace he gets a simple hut on the mountain, of the kind a hermit would live in.

Naḷaṉ levels the ground by smashing rock with rock, frames the hut with bamboo, a giant cousin of rice as the tiger is of the cat, ties it together with sacred darbha grass, and thatches it with sweet-smelling flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villiṉāṟku irukkai ceyyum viruppiṉāl, poruppiṉ vīṅkum
kalliṉāl kallai okkak kaṭāviṉāṉ, kaḻaikaḷ āṉa
nelliṉāl alakkum kālum nirappiṉāṉ, taruppai eṉṉum
pulliṉāl toṭuttu, vācap pūviṉāl vēyntupōṉāṉ.