கம்பராமாயணம் 6805 · யுத்த 8.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மன் உயிர்கட்கு எல்லாம் - நிலைபெற்ற உயிர் இனங்களுக்கெல்லாம்; தாயினும் அன்பினானை - அன்னையினும் அன்பு சிறக்கும் இராமபிரானை; யாரும் - எல்லோரும்; வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி - வாயாலும் மனத்தாலும் போற்றி; தாள் உற வணங்கி - (தம்முடி) அவன் அடியில் படுமாறு தாழ்ந்து பணிந்து; எண்திசை மருங்கும் - எட்டுத் திசைகளின் பக்கங்களிலும்; தம்தம் ஏயின இருக்கை நோக்கி போயினர்- தத்தமக்கு என்று அமைக்கப் பெற்ற இருப்பிடங்களை நோக்கிச் சென்றார்கள்; இராமனும் - (தலைவனான) இராமனும்; பன்னசாலை - (தனக்கு என அமைக்கப்பெற்ற) இலைக் குடிலுக்குள்; இனிது புக்கான் - இனிதே சென்றடைந்தான்.
திரிகரணங்களிலும் வாயும் மனமும் மட்டுமே வாழ்த்தி, உடல் ஏதும் புரியவில்லையோ என எழும் ஐயம் நீக்குவார் "தாளுற வணங்கி" என்றார். வணங்குதல் உடலின் செயல். "யாரும் எண்டிசை மருங்கும் போயினர்" என்பதனால், பாடி வீட்டில் தலைவனான இராமபிரானின் இருப்பிடம் நடுநாயகமான இடத்தில் இருந்தது என்பது தெளிவாம். பன்ன சாலை - இலைக்குடில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Praising him with mouth and mind, bowing until they touched the feet
- of him whose love for all living beings exceeds a mother's,
- everyone went off in all eight directions toward
- the quarters set for each; and Irāmaṉ gladly entered his leaf hut.
What the poem says
Everyone praises Irāmaṉ in word and in thought, and bows down to his feet, so they honour him with speech, mind and body. His love for all creatures is greater than a mother's.
Then each goes off to his own quarters, spreading out in all eight directions. This shows that Irāmaṉ's leaf hut stands at the centre of the camp. He goes into it contentedly.