கம்பராமாயணம் 6806 · யுத்த 8.18

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பப்பு நீர் ஆய வீரர்- பரவும் தன்மையுடைய வானரவீரர்கள்; பருவரை கடலில் பாய்ச்ச - பெரிய மலைகளைக் கடலில் பாய்ச்சிய போது; துப்பு நீர் ஆயதூய சுடர்களும் - பவழம் போன்ற தன் (சிவந்த) தூய கிரணங்களும்; கறுக்க வந்திட்டு - கறுத்துப் போகுமாறு, தன் உடலில் வந்து பொருந்திய; உப்பு நீர் அகத்துள் தோய்ந்த ஒளிநிறம் விளங்க - உப்பு நீரினுள் தோய்ந்ததனால் (மங்கிய தனது) ஒளி (மீண்டும் இயல்பான) நிறம் பெற்று விளங்குதற்காக; அப்பால் - அம் மேல் கடலின்; அப்புநீர் ஆடுவான் போல் - அப்பாகிய (தூய) நீரில் ஆடப் போவான் போல; அருக்கனும் அத்தம் சேர்ந்தான் - சூரியனும் அத்தமன மலையை யடைந்தான்.

பப்பு - பரப்பு. இடைக்குறை. ஒளி நிறம் விளங்க, அப்பால் அப்பு நீர் சூரியனை மூழ்கடிக்கும் அளவுக்குக் கடல் நீர் சூழ்ந்தது ஆதலின், "உப்பு நீர் அகத்துள் தோய்ந்த" என்றார். இராவணனால் சூழ்ந்த தீது நீங்கச் சூரியன் கடல் நீராடினான்; அவன் தீமை சூழாத நன்னீரில் மூழ்க அத்தமன கிரியின் சுனைகளைத் தேட, மலையில் மறைந்தான் என்பதற்காக, மேல் கடலில் மூழ்கினான் என்னாது, "அத்தம் சேர்ந்தான்". அத்தம் - அத்தமனகிரி. தீது நீங்கக் கடலாடுவதும், அதன் உவர்ப்பு நீங்க நன்னீராடுவதும் திருச் செந்தூர் முதலிய தெய்வத்தலங்களில் இன்றும் இயல்பு. "தீது நீங்கக் கடலாடியும், மாசு போகப் புனல் மூழ்கியும்" (பட்டினப் 99-100) என்பதும் காண்க. ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the heroes, spreading everywhere, hurled huge mountains into the sea,
  2. his pure rays, red as coral, were darkened;
  3. so, to make bright again the radiance soaked in that salt water, beyond
  4. the Sun went down behind the western mountain, as if to bathe in fresh water.

What the poem says

Night falls on the first evening in Ilaṅkai. The poet invents a reason for the sunset. While the monkeys were hurling mountains, the salt spray soaked the Sun and dulled his coral-red rays.

So he goes down behind the western mountain to rinse off in fresh water and get his brightness back. This follows the custom, still kept at temples by the sea such as Tiruccentūr, of bathing in the sea to wash away sin and then in fresh water to remove the salt. An ancient poem describes the same practice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pappu nīr āya vīrar paru varai kaṭalil pāycca,
tuppu nīr āya tūya cuṭarkaḷum kaṟukka vantiṭṭu
uppu nīr akattut tōynta oḷi niṟam viḷaṅka, ap pāl
appu nīrāṭuvāṉpōl arukkaṉum attam cērntāṉ.