கம்பராமாயணம் 6807 · யுத்த 8.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மால் உறு குடக வானின் - மயக்கந்தரும் மாலை நேரத்தைக் கொடுக்கும் மேற்கு வானத்தில்; வயங்கிய வந்து தோன்றும் - (உலக இருளிலிருந்து) விளக்கம் பெற வந்து தோன்றுகின்ற; பால் உறு பசுவெண் திங்கள் - பால் போன்று (கதிர்களைச் சொரியும்) இளைய வெள்ளைப் பிறைத் திங்கள்; பங்கய நயனத்து அண்ணல் மேல் - தாமரைப் பூப் போன்ற கண்களையுடைய இராமபிரானின் மீது; உறு பகழி தூர்க்க வெகுண்டனன் - நிறைய அம்புகளைச் சொரியச் சினந்து; விரைவின் வாங்கி - விரைவாக எடுத்து; கால் உற வளைத்த - காலில் ஊன்றி வளைக்கப் பெற்ற; காமன் வில் எனக் காட்டிற்று - மன்மதனது வில்லைப் போன்று வளைந்து காட்சி தந்தது.
மால் - மயக்கம். மாலைக் காலம் இரவா பகலா என மயங்குமாறு தோன்றுதலாலும், காதலர்க்கு "மாலை மயங்கும் இந்நோய்" (திருக். 1227) எனப் படுதலாலும் மயக்கம் தரும் மாலையைக் கொடுக்கும் மேற்கு வானம் என்பார், "மால்உறு குடக வான்" என்றார். குடகம் - மேற்கு. அரை வட்டமாய் வளைத்த வில், மேல் வானில் தோன்றும் பிறைத் திங்கட்கு உவமை யாயிற்று. தற்குறிப்பேற்றஅணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the western sky that brings on bewildering dusk, the young white moon
- that rose up shining there, pale as milk,
- looked like the bow of Kāmaṉ, who in his rage at the lotus-eyed Lord
- had snatched it up quickly and bent it against his foot, to shower him with arrows.
What the poem says
Evening is the hour when separated lovers suffer most. In the western sky a thin crescent moon appears.
Its curve looks like the bow of Kāmaṉ, the god of love, who seems to have grabbed his bow in anger, braced it against his foot and drawn it to rain arrows of longing on the lotus-eyed Irāmaṉ.