கம்பராமாயணம் 6809 · யுத்த 8.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செயிர்ப்பினும் அழகு செய்யும் - சினமுற்றாலும் அழகோடு விளங்கும்; திருமுகத்து அணங்கைத் தீர்ந்து - அழகிய முகங்கொண்ட தெய்வப் பிராட்டியைப் பிரிந்த பின்பு; துயில் சுவை மறந்தான் - தூக்கத்தால் வரும் இன்பம் (முழுவதையும்) துறந்துவிட்ட இராமபிரானின்; தோள் மேல் - புயங்களின் மேல்; தூநிலாத் தவழும் தோற்றம் - தூய வெண்ணிலாவின் கதிர்க் கிரணம் படிந்து ஊர்கின்ற காட்சி; குல மயில் பிரிந்தது என்ன - குலத்திற்சிறந்த மயில் ஒன்று பிரிந்துள்ள காரணத்தால்; மரகதமலை மேல் - மரகதக் குன்று ஒன்றின் மேல்; வன்னி உயிர்ப்பு உடை - நெருப்புப் போன்று மூச்சுவிடும்; வெள்ளை வாள் அராப்பிள்ளை - வெள்ளை நிறமுடைய (நாகத்தின்) பாம்புக்குட்டி ஒன்று; ஊர்வ போன்ற - ஊர்வதைப் போன்றிருந்தது.
அழகு வெகுண்டால், அதுவும் அழகின் ஒரு காட்சியே ஆகுமாதலின், பிராட்டியின் சினமும் ஓர் அழகுக் காட்சியாயிற்று. செயிர்ப்பு- சினம். தோளில் தவழ வேண்டிய குலமயில் இப்போது இல்லையாதலால், நிலாத்தவழ நேர்ந்ததாம். மரகத மலை - இராமபிரான். "தயரதன் பெற்ற மரகத மணித்தடம்" (திருவாய்: 10:1:8) என்பார் நம்மாழ்வார். மரகதக் குன்றம் ஒக்கும் (திருவாய்:2:5:4); மரகத மலை: (திருவாய்:2:6:4) என்பனவும் அவர் வாக்கு. "மையோ, மரகதமோ" (கம்ப. 1920) என்று இவரும் முன்பு குறிப்பிடுவார். தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sight of pure moonlight creeping over the shoulders of him
- who had forgotten the taste of sleep since parting from the goddess whose fair face is lovely even in anger
- was like young white snakes with breath like fire
- crawling over an emerald mountain, because the peacock of its clan had gone.
What the poem says
Irāmaṉ has not slept since he lost Cītai, whose face is beautiful even when she is angry. Moonlight now falls across his dark shoulders.
His body is an emerald mountain, an image the Vaiṣṇava saint-poets also use for him. The peacock that should rest on that mountain, Cītai, is gone. In its place the moonbeams creep over him like young white snakes breathing fire, beautiful to look at but burning him.