கம்பராமாயணம் 6810 · யுத்த 8.22

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன் நெடு நகரம் மாடேவரவர - நிலைத்த புகழ் நீளும் இலங்கை மாநகரத்தின் பக்கத்தே நெருங்க நெருங்க; வயிரச் செங்கைப் பொன் நெடுந்திரள் தோள் ஐயன் - வலிமை வாய்ந்த வயிரம் போன்ற சிவந்த கரங்களையும், அழகியநீண்டு திரண்ட தோள்களையும் உடைய இராமபிரான்; மெய் உறப் புழுங்கிநைந்தான் - உடல் மிகவெயர்க்க (பிராட்டியின் பிரிவால்) நைந்து வருந்தினான்; நெடும் பல் காதத்தேயும் சுடவல்ல - நீண்ட பலகாத தூரங்கட்கு அப்பாலிருந்தும் எரிக்கவல்ல; பவளச் செவ்வாய் அம் நெடுங்கருங்கண் தீயை - பவளம் போன்ற சிவந்த வாயினை, அழகுமிகும் நீண்ட கருங்கண்களை உடைய (பிராட்டி எனும்) அந்தத் தீயினை; அணுகினால் தணிவது உண்டோ? - நெருங்கினால், (அது) சுடாமல் தணிவதற்கு (வாய்ப்பேதும்) உண்டோ? (இல்லை என்க).

பல நெடுங்காதத்துக்கு அப்பால் தண்டக வனத்தில் உள்ள போதே சுட்ட, அது இருக்கும் இடத்திற்கு மிக அருகே நெருங்கிய பிறகு, மிகச் சுடாமல் என் செய்யும் என்பார், "பல் நெடுங்காதத் தேயும் சுட வல்ல கருங்கண் தீ, அணுகினால் தணிவது உண்டோ?" என்றார். பிற நெருப்புப் போலல்லாமல் செவ்வாயும் கருங்கண்ணும் பெற்ற தீ இது என்பார் "பவளச் செவ்வாய், அம் நெடுங் கருங்கண் தீ" என்றார். நீங்கின் தெறூஉம்; குறுகுங்கால் தண் என்னும் தீ (திருக். 1104) என வள்ளுவர் காமத் தீயினைக் குறிப்பார். இங்கு நெருங்குங்கால் சுடுவதேன்? என்பது வியப்புத் தருவது ஒரு நயம். தீ, தொடிற் சுடுவதல்லாது காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ? (திருக்: 1159) என்பர் ஆதலால், இவ்விந்தைத் தீ, (பிராட்டியைத்) தொட்டாலே ஆறும் என்பது குறிப்பு. வயிரச் செங்கையும் பொன் நெடுந்திரள் தோளும் இருந்தும் ஐயன் புழுங்கி நைந்தான் என்று, தீயின் பெருமை யுணர்த்தியவாறு. வயிரமும் எரிக்க வல்ல தீ இது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great enduring city drew nearer and nearer, the Lord
  2. of red diamond-hard hands and long, rounded golden shoulders sweltered all over and wasted;
  3. that fire with coral-red lips and long dark eyes, which could burn even from many long leagues away:
  4. if one comes close to it, will it ever die down?

What the poem says

The nearer Irāmaṉ comes to Ilaṅkai, the more he burns with longing. Cītai is pictured as a fire, with coral-red lips and long dark eyes, that scorched him even from far off in the Daṇḍaka forest. Now that he is close, how could it burn any less?

The Tirukkuṟaḷ says the fire of love is strange: it burns when you are far away and grows cool when you draw near. Here it burns hotter as he approaches. The commentary suggests it will be quenched only when he holds her again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉ neṭu nakaram māṭē varavara, vayirac ceṅ kaip
poṉ neṭun tiraḷ tōḷ aiyaṉ, mey uṟap puḻuṅki naintāṉ;
pal neṭuṅ kātattēyum cuṭa valla pavaḷac cev vāy
an neṭuṅ karuṅ kaṇ tīyai aṇukiṉāl taṇivatu uṇṭō?