கம்பராமாயணம் 681 · பால 10.129
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறைமுனி - வேதங்களையறிந்த கோசிக முனிவன்; உரைத்தவண்ணம் - கூறியபடியே; மைந்தன் - அந்தக் குமாரன்; மகத்து உறை - யாகம் செய்யும் இடத்தில் (தியானிக்க); சிறை உறுகலுழன் - வலிமையான சிறகுள்ள கருடனும்; அன்னம் - அன்னமும்; சே - காளையும்; முதல் பிறவும் - முதலிய பிற ஊர்திகளையும்; ஊரும் - ஏறி நடத்தும்; இறைவர் - (திருமால், பிரமன், சிவன் முதலிய) தலைமைத் தேவர்கள்; அமரர் சூழ - மற்றைத் தேவர்கள் தம்மைச் சூழ்ந்து வரும்படி; தொக்கு - (அவ் வேள்விச் சாலைக்கு) திரண்டு வந்து; இளவல்தன் உயிரும் - அந்த இளைஞனது உயிரையும்; முறைதரு - வேதமுறைப்படி செய்யப்படும்; வேந்தன் மகமும் - அவ்வரசனது யாகத்தையும்; காத்தார் - (அழியாதவாறு) பாதுகாத்தார்; முனியும் - கோசிக முனிவனும்; வடதிசை சென்றான் - (மேற்குத் திசையில் தனது தவம் முடியாததால்) வடதிசை நோக்கிப் போனான்.
ஊர்திகள்: இந்திரனுக்கு - வெள்ளை யானை. அக்கினிக் கடவுளுக்கு - ஆட்டுக்கடா. இயமனுக்கு - எருமைக்கடா.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When, as the Vedic sage had said, the youth was at the sacrifice,
- the lords who ride the winged Garuḍa, the swan, the bull and other mounts
- gathered, with the immortals around them, and protected both the young man's life
- and the king's rightly ordered sacrifice; and the sage went to the northern quarter.
What the poem says
Everything happens as Kaucikaṉ promised. When Cuṉaccēpaṉ recites the mantras at the sacrificial post, the great gods — Viṣṇu on Garuḍa, Brahmā on his swan, Śiva on his bull and others — arrive with their retinues, save the youth's life and see the king's sacrifice properly completed. Kaucikaṉ, his penance in the west interrupted, moves on to the north.