கம்பராமாயணம் 682 · பால 10.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முனியும் - கோசிக முனிவனும், வடாதிசை நண்ணி - வடக்குத் திக்கை அடைந்து; ஆங்கு - அவ்விடத்தில்; மலர்க்கரம் நாசி வைத்து - தாமரை போன்ற கையின் விரல்களை மூக்கின் மேல் வைத்து; இடாவு பிங்கலையால் நைய - இடைகலையானது பிங்கலையோடு அடங்கும்படி (பிராணாயாமம் செய்து); இதயத்து ஊடு எழுத்து ஒன்று - மனத்திலே பிரணவ மகாமந்திரத்தை; எண்ணி - தியானித்துக் கொண்டு; பல்பருவம் - பல ஆண்டுகள் வரை; விடாது நிற்ப - (தவத்தில்) நிலைத்து நிற்க; மூலம் மா முகடு விண்டு - (அப்பொழுது) மூலாக்கினியால் (அவனது) பெரிய கபாலம் வெடித்து விரிந்து; இருள் படலை - (அதிலிருந்து) இருளின் கூட்டத்தையொத்த புகை மண்டலம், தடாது - தடுக்கப்படாமல்; தாவி - மேல் எழுந்து; மூட - எங்கும் கவிந்து நின்ற அளவிலே; எத்தலமும் - எல்லாவுலகும்; சலித்தது - சலிப்புற்றன.
இடைகலை என்னும் நாடியிலிருந்து இட மூக்கால் விடும் மூச்சுக் காற்றை இடைகலை என்றும், பிங்கலை என்னும் நாடியிலிருந்து வலமூக்கால் விடும் மூச்சுக் காற்றை பிங்கலை என்றும், இவை பிராணாயாமம் செய்யும் போது நிகழ்வன என்றும் கூறுவர். இருள்படலை: இருளின் தொகுதி. இடை பிங்கலை என்பன: தசநாடிகளில் சேர்ந்தவை. முகடு: தலையோட்டின் உச்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sage reached the northern quarter, and there, placing his flower hand on his nose,
- so that iṭā was subdued with piṅkalai, meditating in his heart on the one syllable,
- he stood unbroken through many seasons; then the great crown of his head split open at the root-fire,
- and as a pall of darkness spread unchecked and covered all, every world was shaken.
What the poem says
In the north Kaucikaṉ undertakes yogic austerity. With his fingers on his nostrils he controls the breath, merging the left channel (iṭā) and the right (piṅgalā), and meditates on the single sacred syllable Om in his heart. He holds this for many years.
At last the inner fire rising from the base of the spine bursts open the crown of his skull, and a smoke black as darkness pours out and covers everything, making all the worlds tremble.