கம்பராமாயணம் 6812 · யுத்த 8.24

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவியின் சேனை - வானரச் சேனையாகிய; பேர்வுறு பெருங் கடல் வெள்ளம் தன்னுள் - இடம் பெயர்ந்த (பாறு கடல் போன்ற) படை வெள்ளத்துள்ளே; ஓர்வுறு மனத்தன் ஆகி - ஆராய்ச்சி கொண்ட மனம் உடையவனாக; ஒற்றரை உணர்ந்து கொண்டான் - ஒற்றிய வந்தோரை உணர்ந்து கொண்ட வீடணன்; சேர்வுறு பாலின்வேலை - (தண்ணீர் கலந்தாலும் தன்னோடு பாலாகவே) சேர்த்துக் கொள்ளும் தன்மை வாய்த்த பாற்கடலில்; சிறு துளி தெறித்தவேனும் - சிறிய நீர்த்துளிகள் தெறித்ததாயினும்; நீரினை வேறு செய்யும் - அந்த நீர்த்துளிகளையும் பிரித்து எடுத்திடவல்ல; அன்னத்தின் நீரன் ஆனான் - அன்னப் பறவையின் தன்மையினன் ஆயினான்.

எங்கு இராவணன் சேனையினைச் சார்ந்தோர் இராம சேனையுட் புகுந்து பங்கம் விளைத்து விடுவாரோ? என விழிப் போடேயே இருந்தான் ஆதலின் வீடணனை "ஓர்வுறு மனத்தன்" என்றார். இவ்வாறு, பகைவர் சேனையுட் புகுந்து, ஒற்றறிதலும், பங்கம் விளைத்தலும் அரக்கர் இயல்பு என்பதனை, வீடணன் நன்குணர்ந்தவன் ஆதலும் 'ஓர்வுறு மனத்தன்' என்பதனால் போதரும். பாலோடு சேர்ந்த நீர் போல வேற்றுமை தெரிய இயலாதிருந்தனர் என்பார் "சேர்வுறு பாலின் வேலை சிறுதுளி" என்றார். பாற்கடலில் சிறு நீர்த்துளி தெறித்தாலும் அன்னம் பிரித்தெடுக்க வல்லது என்பார், "சிறுதுளி தெரித்தவேனும் நீரினை வேறு செய்யும் அன்னம்" என்றார். தீமையை வேறு பிரித்து அறியவல்ல அன்னத்தின் குணம் வீடணனுக்கு இருந்தமை குறித்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Within the great sea-flood of the moving monkey army,
  2. with a searching mind, he picked out the spies;
  3. he was like the swan that can separate out the water
  4. even when only small drops are splashed into the Ocean of Milk that absorbs them.

What the poem says

Vīṭaṇaṉ has been watchful all along, because he knows Arakkars often sneak into enemy armies to spy and to cause trouble. Among the vast, surging host of monkeys he spots the disguised spies.

They blend in like water mixed into milk, but he is like the legendary swan, which can separate milk from water even when only a few drops have fallen into the Ocean of Milk. The swan stands for the power to tell good from bad.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pērvuṟu kaviyiṉ cēṉaip peruṅ kaṭal veḷḷamtaṉṉuḷ
ōrvuṟum maṉattaṉ āki, oṟṟarai uṇarntu koṇṭāṉ;
cērvuṟu pāliṉ vēlaic ciṟu tuḷi teṟittavēṉum
nīriṉai vēṟu ceyyum aṉṉattiṉ nīraṉ āṉāṉ.