கம்பராமாயணம் 6813 · யுத்த 8.25

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெருமையும் சிறுமைதானும் - (பெரியதிற்) பெரியதும் (சிறியதிற்) சிறியதும் ஆகிய இரண்டும்; முற்றுறு பெற்றி - (ஒன்றுக்குள்) முழுவதுமாகப் பொருந்தியுள்ள தன்மை; ஆற்ற அருமையின் - மிகவும் (அறிதற்கு) அரிது ஆதலின்; அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி - பரந்து மிகுந்துள்ள (வேதாகமங்களிற் கூறப்படும்) அணிமா முதலிய வித்தைகட்குக் கட்டுப்பட்டு; தாமும் தம் உருவமும் தெரியாவண்ணம் - தாமும் தம் உருவமும் கண்களாம் புலன் உணர்வுக்குத் தட்டுப்படா வண்ணம்; ஒளித்தனர் உறையும் மாயத்து இருவரை - மறைந்தவராய், உடலுக்குள்ளேயே வாழ்கின்ற விசித்திரத் தன்மை வாய்ந்த உயிர் (சீவான்மா) இறைவன் (பரமான்மா) ஆகிய இருவரையும்; ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் - ஒரு சேரப் பார்க்க வல்ல யோகியைப் போன்றவனும் ஆனான் வீடணன்.

"தகர வித்தையாவது- உடம்பில், இருதயத் தாமரை என்னும் சின்னஞ்சிறிய மாளிகையுள் சிற்றம்பலத்தில் உள்ளது எதுவோ அதனைத் தேடிக் காணுதல்" என்னும் சாந்தோக்கிய உபநிடதம். (சாந்தோ 6:1) தகர என்றால் சிறிய என்று பொருள். தகராகாசம் என்றால் சிறிய வெளி, சிற்றம்பலம். அதனுள் பரமான்மாவும் சீவான்மாவும் அடங்கி உள்ளன என்பது மறை மொழி. அவ்விருவரையும், இருதயத் தாமரையெனும் வீட்டில், கருவி கரணங்களை அடக்கி, வைராக்கியம், பிரம்மசரியம், சத்தியம் முதலிய சாதனங்களுடன் கூடி ஆசாரியன் உபதேசித்த முறையில் தியானம் செய்தால் அறியலாம் என்பது மேற்காணும் உபநிடதச் சூத்திரத்திற்குச் சங்கரர் தந்த பேருரை. சிறிய இடத்தில் சிறிய பொருள்தானே அடங்கும் எனில், அதில் அடங்குவது, கருப் பக்கிருகத்தில் கோயில் முழுவதும் அடங்குவது போன்றது ஆம். எப்படிச் சிறிய கண்ணாடியில், பெரிய வெளியான பிரதி பிம்பத்தைக் காணலாமோ அப்படிச் சிற்றம்பலத்தில் உலகனைத்தும் காணலாம். எதற்கும் அடங்காத ஒன்றை, வெளியென்றோ, ஒளியென்றோ பெரிதென்றோ, சிறிதென்றோ கூறுதல் உண்மையில் ஒவ்வாது. அணுவுக்கும் அணுவாகவும் மகத்துக்கும் மகத்தாகவும் ஆன்மா உளது என்பது கடவல்லி உபநிடதம் (2.20) "பரமான்மா, சீவான்மா என்று கூறப்படும் இருவர் ஞான ரூபமான சிறகுகளையுடையவர்களாய், சரீரமான ஒரே மரத்தினைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்பது இருக்குவேதம் என்னும் ஈடு (1:1:3) நம் கண்கள் பெரியதிற் பெரியதையும், சிறியதிற் சிறியதையும் காணல் இயலாத குறையுடையவை; யோகி அரிதின் முயன்று ஞானக் கண் கொண்டு, உடலின் உள்ளே பெரிதிற் பெரிதாய பரம் பொருளையும், சிறிதிற்சிறிதாய சீவனையும் ஒருங்கே கண்டுவிடுபவன் ஆதலின் "மாயத்து இருவரை ஒருங்குகாணும் யோகி" என்றார். மாயம்- அட்டாங்கவித்தை. ஆன்மாவைப் போல் அணுவளவாதல் ஆகிய அணிமா; மிகப் பெரும் உருவடைதல் ஆகிய மகிமா; கண்டிப்புள்ளவற்றை ஊடுருவிச் செல்லுதல் ஆகிய கரிமா; இலகு வாதல் ஆகிய இலகிமா; வேண்டுவன அடைதல் ஆகிய பிராத்தி; நிறையுடைய வாதல் ஆகிய பிராகாமியம்; ஆட்சியுளவாதல் ஆகிய ஈசத்துவம்; எல்லாம் தன்வசமாக்கல் ஆகிய வசித்துவம் ஆகிய இவை எட்டும் அட்டாங்க சித்தி எனப்படும். இவை எட்டும் வல்லார் யோகியர் ஆவர். பரம் பொருள் யோகிக்குக் காட்சிப் படுவான் என்பதனை, (2056) முன்பும் உரைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because it is so very hard to grasp how the greatest and the smallest both dwell there entire,
  2. the two who live hidden through magic, held within the vast and far-reaching lore,
  3. so that neither they nor their forms can be seen:
  4. he who sees both at once, the yogi, he could be likened to him.

What the poem says

Vīṭaṇaṉ's skill in spotting the disguised spies is compared to the insight of a yogi. The Upaniṣads teach that two dwell hidden together in the small space of the heart: the supreme Self, greater than the greatest, and the individual soul, smaller than the smallest, like two birds on one tree.

Ordinary eyes cannot see either. A yogi who has mastered the eight powers, such as becoming as small as an atom or as large as one wishes, sees both at once with the eye of wisdom. In the same way Vīṭaṇaṉ sees through the spies' magical disguise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1perumaiyum ciṟumaitāṉum muṟṟuṟu peṟṟi āṟṟa
arumaiyiṉ akaṉṟu, nīṇṭa viñcaiyuḷ aṭaṅki, tāmum
uruvamum teriyāvaṇṇam, oḷittaṉar, uṟaiyum māyattu
iruvarai oruṅku kāṇum yōkiyum eṉṉal āṉāṉ.