கம்பராமாயணம் 6815 · யுத்த 8.27

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான், ‘பல்லோர்
நோம் பிழை செய்த கொல்லோ குரங்கு? என, இரங்கி நோக்கித்
தாம் பிழை செய்தாரேனும், தஞ்சம் என்று அடைந்தார் தம்மை
நாம் பிழை செய்யல் ஆமோ? நலியலிர் விடுதிர் ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

பாம்பு இழைப் பள்ளிவள்ளல் - பாம்பினால் இழைக்கப்பட்ட படுக்கையினையுடைய (கருணை) வள்ளலாகிய இராமபிரான்; பகைஞர் என்பது உணரான் - (குரங்கு உருவில் உள்ள ஒற்றர்களை) பகைவர்களாகிய அரக்கர்கள் என்று உணராமல், (குரங்குகளே என்று எண்ணி), பல்லோர் நோம்பிழை செய்த கொல்லோ? - "பலர் மனம் நோகுமாறு இவ்விரு குரங்குகளும் பிழைபுரிந்தனவோ?; குரங்கு என இரங்கி நோக்கி - புரிந்து இருப்பினும் (எளிய) (நமையடைந்த) குரங்குகள் தாமே! என இரக்கமுற்றுப் பார்த்து; தாம் பிழை செய்தாரேனும் - இவ்விருவர் தாமும் பிழையே புரிந்தவராய் இருப்பினும்; 'தஞ்சம்' என்று அடைந்தோர் தம்மை - நம்மைப் புகல் என்று சரணம் அடைந்தவர்களை; நாம் பிழை செய்யல் ஆமோ? - (நாம் கருணைகாட்டி மகிழ்வித்தல் அன்றி) நாமே அவர்கட்குப் பிழை செய்து துன்புறுத்தல் ஆமோ?; நலியலிர் விடுதிர்! - (அவர்களை) வருத்தாதீர்; (கட்டுக்களை அவிழ்த்து) விடுங்கள்! என்றான்.

பிழை புரிந்தாரேயாயினும், அடைக்கலம் என்று வந்தவர்கள் காத்தற்கு உரியவரே எனும் காவியத்தின் பாவிகத்தை இயலும் இடம் எல்லாம் வற்புறுத்தும் கவிஞர் பிரான் இங்கும் அதனை வெளிப்படுத்துவாராய், "தாம்பிழை செய்தாரேனும் தஞ்சமென்றடைந்தோர் தம்மை நாம் பிழை செய்யலாமோ?" என இராமபிரான் வாயிலாய் விளம்புகின்றார். முன்பும் இது (6469, 6470) கூறியுள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The generous one whose bed is woven of a serpent, not knowing they were enemies,
  2. looked on them with pity, thinking, 'Have these monkeys done some wrong that hurt many?',
  3. and said, 'Even if they have done wrong, those who have come to us
  4. for refuge, may we do wrong to them? Do not hurt them; let them go.'

What the poem says

Irāmaṉ, who as Viṣṇu sleeps on the serpent Ādiśeṣa, still takes the prisoners for real monkeys. He feels sorry for them and wonders what harm they could have done.

He states a principle that runs through the whole epic: even if they have done wrong, they have come to us for shelter, and we must not wrong those who seek our refuge. He orders them released unharmed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāmpu iḻaip paḷḷi vaḷḷal pakaiñar eṉṟu uṇarāṉ, ‘pallōr
nōm piḻai ceytakollō kuraṅku? eṉa, iraṅki nōkki,
tām piḻai ceytārēṉum, tañcam eṉṟu aṭaintōrtammai
nām piḻai ceyyalāmō? naliyalīr viṭutir ‘eṉṟāṉ.