கம்பராமாயணம் 6816 · யுத்த 8.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் - உள்ளத்தே (இடம் முழுதும்) நிரம்பி, (முகத்திலும் பொங்கிப்) பொலியும் கருணையையுடைய வள்ளலாகிய இராமபிரானின் அருள் (தேக்கத்தைக்) கண்டு; அழுத கண்ணன் - (மனம் உருகி) அழுத கண்களையுடைய வீடணன்; நகம் நிறை கானின்வைகும் - (இவர்கள்) மலைகள் நிறைந்த கானகங்களில் வாழும்; நம் இனத்தவரும் அல்லர் - நம்முடைய இனத்தவராகிய வானரர்களும் அல்லர்; தகை நிறைவு இல்லா உள்ளத்து - நற்பண்புகள் நிறையாத மனத்தினையுடைய; இராவணன் தந்த ஒற்றர் - இராவணன் (ஒற்றறிய) அனுப்பியுள்ள ஒற்றர்கள்; சுகன் இவன் - இவனோ சுகன் எனும் பெயருடையான்; அவன் சாரன் - அவனோ சாரன் எனும் பெயருடையான்; என்பது தெரியச் சொன்னான் - என்று இராமபிரான் அறியுமாறு எடுத்துரைத்தான்.
நகம் நிறை கான் - மலைக்காடு. நகம் - மலை. நிலக்காடுகளும் உளவாதலின் "நகம் நிறைகான்" என்றார். நகம் - மரமுமாம். வீடணன் வானர இனத்தான் அல்லன்; எனினும், சேர்ந்திணைந்த திறத்தால் இராமன்பால் சேர்ந்தவரோடு தன்னையும் உளப்படுத்தி 'நம் இனத்தவர்' எனக் குறித்த நயம் உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose eyes wept at the compassion of the generous Lord, which filled his heart and overflowed,
- said, 'They are not of our kind who live in the forests full of hills;
- they are spies sent by Irāvaṇaṉ, whose heart is empty of goodness;
- this one is Cukaṉ, and that one Cāraṉ,' making it plain.
What the poem says
Seeing how compassionate Irāmaṉ is, even toward spies, Vīṭaṇaṉ is moved to tears.
He explains that these are not monkeys from the mountain forests but spies sent by the heartless Irāvaṇaṉ, and he names them: Cukaṉ and Cāraṉ. Though he is an Arakkaṉ himself, Vīṭaṇaṉ says 'our kind' of the monkeys, counting himself among Irāmaṉ's people.