கம்பராமாயணம் 6817 · யுத்த 8.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கல்விக் கண் மிக்கோன் சொல்ல - (உண்மைக்) கல்வியில் மேம்பட்டுயர்ந்தவனான வீடணன் (இவ்வாறு) கூறுகையில்; கருமன நிருதக் கள்வர் - இருண்ட மனமுடைய அரக்கராகிய அவ்வொற்றர்கள்; வல்விற்கை வீர! - (இராமபிரானை நோக்கி) வலியவில் ஏந்திய கையினையுடைய வீரனே! இவ் வானரர் வலியைநோக்கி - இந்த வானர வீரர்களின் வலிமையை உணர்ந்து; வெல்விக்கை அரிது என்று எண்ணி - (இவர்களை இராவணன்) வெல்லுமாறு செய்தல் இயலாது என்று கருதி; வினையத்தால் எம்மை எல்லாம் - சூழ்ச்சியினால் எம் போன்ற குரங்குகளை யெல்லாம்; கொல்விக்க வந்தான் - கொலையுண்ணுமாறு செய்ய வந்தவன் (இவ் வீடணன்); மெய்ம்மை; குரங்குநாம் - சத்தியம்; நாங்கள் உண்மையில் குரங்குகளே; கொள்க என்றார்- என்று மனங் கொள்ள வேண்டும் என்றனர்.
கல்விக் கண் மிக்கோன் - வீடணன். கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே (குறள் 2) என அறிந்தவனாதலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the one rich in learning said this, the dark-hearted Nirutan thieves
- said, 'Hero with the mighty bow in your hand! Seeing the strength of these monkeys
- and thinking it hard to make them be beaten, he came
- to have all of us killed by a trick; it is the truth; we are monkeys, believe it.'
What the poem says
The spies try to turn the tables. They tell Irāmaṉ that Vīṭaṇaṉ is the real traitor: seeing that Irāvaṇaṉ could not defeat these monkeys in battle, he has come to get them killed off by trickery.
They swear they really are monkeys. Vīṭaṇaṉ is called 'rich in learning' because he knows that the true fruit of learning is to worship the Lord, as the opening of the Tirukkuṟaḷ says.