கம்பராமாயணம் 6818 · யுத்த 8.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கள்ளரே! - (இதனைக் கேட்ட வீடணன்) (இவர்கள் வானரர் அல்லர்) 'கள்வரே!; காண்டி' என்னா மந்திரம் கருத்துள் கொண்டான்; தெவ்வர் - காண்பாயாக என்று (ஒரு) மந்திரத்தை மனத்துக்குள் உருவேற்றினான்; அரக்கர் ஆகிய ஒற்றர்கள் (பகைவர் வேடத்தைத்); தெள்ளிய தெரிக்கும் - தெளிவாகத் தெரிவிக்கவல்ல; தீர்வினை சேர்தலோடும் - (குரங்கு வடிவத்தை மாற்றவல்ல அம்மந்திர ஆற்றல்) நெருங்கியவுடன்; இரதம் துள்ளியின் தோய்ந்து - பாதரசத்துளி மேலே படப்பெற்று; தொல்நிறம் கரந்து - பழைய நிறம் மறைந்து; வேறாய் - புதுநிறம் பெற்று; வெள்ளி போன்று இருந்த - வெள்ளி போல இருந்த (செம்பு); செம்பும்ஆம் என - (மீண்டும் புடம் இட்டால்) செம்பு ஆகவே ஆவது போன்று; வேறுபட்டார் - குரங்கு உரு மாறிப்பழைய அரக்கர் வடிவத்தைப் பெற்றார்கள்.
தீர்வினை - மந்திர ஆற்றல் தீரும் நிலை குறித்து நின்றது. தூலம், சூக்குமம் எனும் மந்திர வகை இரண்டனுள் வாய்வழி வெளிப்படாமல் மனத்துக்குள் ஓதும் சூக்கும மந்திரம் அது ஆதலால், "கருத்துள் கொண்டான்" என்றார். துளி - துள்ளி என விரிந்தது. இரதம் - இரசம், பாதரசத்தைக் குறித்து நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Thieves they are; see for yourself,' he said, and recited a spell in his mind;
- as that power, which lays things bare and undoes disguises, reached the foes,
- like copper that, touched by a drop of quicksilver, hid its old colour
- and looked like silver, and then became copper again, they changed.
What the poem says
Vīṭaṇaṉ answers, 'They are thieves. Watch.' He silently recites a spell, the kind spoken only in the mind, which breaks magical disguises.
As it takes effect, the spies' monkey forms fall away and they return to their true shape as Arakkars. The poet compares this to copper coloured with a drop of mercury so that it looks like silver, which shows itself as copper again once the coating is gone.