கம்பராமாயணம் 6819 · யுத்த 8.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் - துன்புற்றோரின் துயரம் போக்குதற்காகத் (தோன்றியுள்ள) காத்தலில் வல்லவனாகிய இராமபிரான்; மின்குலாம் எயிற்றர் ஆகி - மின்னல் போல் ஒளிசிந்தும் பற்களையுடையவர் ஆகி; வெருவந்து - (தம் உண்மையுருவம் வெளிப்பட்டதால்) அச்சமுற்று; வெற்பின் நின்ற வன்கணார் தம்மை நோக்கி - மலையெனநின்ற கொடியோர்களான அந்த ஒற்றர் இருவரையும் நோக்கி, மணிநகை முறுவல் தோன்ற - அழகிய பற்கள் (சிறிதே) தோன்றுமாறு முறுவலித்து; 'அஞ்சல், போந்ததன்மை என் கொல்? - "அஞ்ச வேண்டா; (நீங்கள்) வந்த காரணம் என்ன?; எல்லாம் தெரிய இயம்புதிர்' என்றான் - யாவற்றையும் தெளிவுறக் கூறுங்கள்" என்று கூறினான்.
புன்கண்- துன்பம். முதல் நாட்போரில், இராவணன் துன்பம் கண்டு, "இன்று போய் நாளை வா" (கம்ப. 7271) என இயம்பியதும் இக் கருணைத் திறத்தால் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To those brutes standing like hills, now with teeth gleaming like lightning,
- in terror, the protector who removes the sorrow of the sorrowful
- said, with a smile that showed his jewel-like teeth, 'Why have you come?
- Tell me everything clearly; do not be afraid.'
What the poem says
Exposed in their true form, huge as hills, with fangs flashing like lightning, the two spies stand shaking with fear.
Irāmaṉ, the protector who takes away the suffering of the suffering, only smiles. He tells them not to be afraid and asks them to explain plainly why they have come. The same mercy will lead him later, on the first day of battle, to tell a defeated Irāvaṇaṉ, 'Go now, and come back tomorrow.'