கம்பராமாயணம் 6820 · யுத்த 8.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாய் தெரிந்து - (ஒற்றுதலின்) வாயில்களை (நன்கு) அறிந்து; உணராவண்ணம் கழறுவார் - பிறர் அறியாதவண்ணம் (பகைப்புலத்து நிகழ்வுகளை அறிந்துவந்து) கூறுவதாகிய ஒற்றுத் தொழில் வல்லராகிய அவ்விருவரும்; வணங்கி வீர! யாங்கள் - (இராமபிரானை) வணங்கி "வீரனே! நாங்கள்; தாய் தெரிந்து - எவ்வுயிர்க்கும் தாய் என்று (சான்றோரால்) உணரப்பட்டு; உலகுகாக்கும் தவத்தியை - உலகத்து ஆன்மாக்களைக் காக்கும் தவமுடைய பிராட்டியை; தன்னைக் கொல்லும் நோய் - (பிழை புரியும்) தன்னைக் கொல்ல வந்த நோய் என்று; தெரிந்து உணரான் - ஆராய்ந்து உணராமல்; தேடிக் கொண்டனன் நுவல - (தீமையைத்) தேடி விளைவித்துக் கொண்டவனாகிய இராவணன் கூறிய சொற்களைக் கொண்டு; வினையினால் மாய வேய்தெரிந்து உரைக்க வந்தோம் - எங்கள் தீவினையால், வஞ்சனையாக ஒற்றறிந்து போய் (அங்கு) உரைக்க (இங்கு) வந்தோம்" என்றார்.
"பிராட்டி தேவர்கள் (கரங்களில்) பூண்ட விலங்கினை ஒடிக்கத் தான் தன் கரங்களில் விலங்கு பூண்டு பத்துத்திங்கள் தவம் இருந்தாள்" (ஸ்ரீவசன பூஷணம்) என்பவாதலின் 'உலகு காத்த தவத்தியை' என்றார். வேய் தெரிதல் - ஒற்றறிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The ascetic lady, known as mother, who has guarded the world, he took, never seeing
- in her the sickness that will kill him; at his word, we,'
- said those who knew the ways and could report unseen, bowing, 'by deceit
- came to spy out your camp and report, through our ill fate, hero.'
What the poem says
The spies, experts in their trade, bow and confess. Irāvaṇaṉ seized Cītai, the mother of the world, never realising that she is the disease that will kill him. On his orders, through their own bad luck, they came to spy on the army in disguise and carry the news back.
A Vaiṣṇava text says Cītai accepted captivity, in a sense, as a penance to free the gods from their own chains, which is why she is called the lady of penance who guards the world.