கம்பராமாயணம் 6821 · யுத்த 8.33

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘ ‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
சொல்லுதிர்; மகர வேலை, கவிக்குல வீரர் தூர்த்துக்
கல்லினில் கடந்த வாறும் கழறுதிர்; “காலம் தாழ்த்த
வில்லினர், வந்தார் ‘‘ என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர். ‘

பொருள் · Meaning in Tamil

செய்யும் தொழிலில் திறம் வாய்ந்தோரே!; எல்லை இல் இலங்கைச் செல்வம் - அளவுக்குள் அகப்படாத இலங்கைமாநகரின் செல்வம் முழுவதனையும்; இளையவற்கு - தம்பியாகிய வீடணனுக்கு; ஈந்ததன்மை சொல்லுதிர் - நான் கொடுத்துவிட்ட செய்தியினை (இராவணனுக்குச்) சொல்லுங்கள்; மகர வேலை - மகர மீன்கள் நிறைந்துள்ள கடலை; கவிக்குல வீரர் - வானர குலத்துத் தோன்றிய வீரர்கள்; கல்லினில் தூர்த்துக் கடந்த வாறும் - மலைகளையிட்டு நிரப்பித் தாண்டி வந்துவிட்ட திறத்தையும்; கழறுதிர் - (அவனிடம் போய்) கூறுங்கள்; காலம் தாழ்த்த வில்லினர் - இத்துணைக் காலம் தாமதித்திருந்த வில்லினர் (இருவரும்), வந்தார் என்றும் விளம்புதிர்- (இப்போது) வந்துவிட்டார்கள் என்பதனையும் (அவனிடம் போய்) உரையுங்கள்.

அவன் தம்பியன்றி, தனக்கும் தம்பியாதலின் "உன் இளையவற்கு" எனாது பொதுப் படக் கூறிய திறம் காண்க. ஊர் தேடு படலச் செய்யுள்களால், இலங்கைச் செல்வம் உணரலாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Tell him how the boundless wealth of Ilaṅkai has been given to the younger brother;
  2. tell him how the heroes of the monkey race filled in the makara-haunted sea
  3. with stone and crossed it; and tell him too, "The bowmen
  4. who were so long delayed have come," you who are skilled in your work.'

What the poem says

Instead of punishing the spies, Irāmaṉ gives them a message to carry back to Irāvaṇaṉ.

They are to tell him that all the measureless wealth of Ilaṅkai has already been given to the younger brother, Vīṭaṇaṉ; that the monkeys have filled the sea with stones and crossed it; and that the two bowmen, slow to come until now, have arrived. Irāmaṉ says 'the younger brother' and not 'your younger brother', since he now counts Vīṭaṇaṉ as his own brother too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ellai il ilaṅkaic celvam iḷaiyavaṟku īnta taṉmai
collutir; makara vēlai, kavik kula vīrar tūrttuk
kalliṉiṉ kaṭantavāṟum kaḻaṟutir; “kālam tāḻtta
villiṉar, vantār ‘‘ eṉṟum viḷamputir viṉaiyam mikkīr. ‘