கம்பராமாயணம் 6822 · யுத்த 8.34

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கொத்து உறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கைக் குன்றம்,
தத்து உறு தடநீர் வேலை தனில், ஒரு சிறையிற்று ஆதல்,
ஒத்து உற உணர்ந்திலாமை, உயிரோடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால். ‘

பொருள் · Meaning in Tamil

கொத்துறு தலையான் வைகும் - கொத்தாக அமைந்த தலைகளையுடைய இராவணன் வாழும்; குன்றக் குறும்பு உடை இலங்கை - மலை அரண்கள் சூழ்ந்த இலங்கை நகரம்; தத்துறுதட நீர் வேலை தனின் ஒருசிறையிற்று ஆதல் - (அலைகள்) தத்தும் அகன்ற கடற் பரப்பில் ஒரு பக்கத்தில் (ஒளிந்தவாறு) கிடப்பதை; ஒத்துற உணர்ந்திலாமை - மனம் பொருந்த உணராமைதான்; இத்துணை உயிரொடும் உறவினோடும் இருந்தது - இத்தனைகாலம் இராவணன் உயிரோடும் உறவினரோடும் இருந்ததற்குக் காரணம், என்னும் தன்மையும் இயம்புவீர் - என்னும் செய்தியையும் அறிவியுங்கள்.

குறும்பு - அரண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Tell him too that the hill-fortressed mountain of Ilaṅkai, where the one of clustered heads lives,
  2. lying off in one corner of the wide, leaping-waved sea,
  3. was not truly known to us, and that is the only reason
  4. he has lived this long with his life and his kin.'

What the poem says

The message continues. Ilaṅkai, ringed by its mountain fortresses and home of the many-headed Irāvaṇaṉ, lies tucked away in a corner of the vast ocean.

Irāmaṉ says the only reason Irāvaṇaṉ and his family are still alive is that he had not, until now, clearly known where the city was.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kottuṟu talaiyāṉ vaikum kuṟumpuṭai ilaṅkaik kuṉṟam,
tattuṟu taṭa nīr vēlaitaṉiṉ, oru ciṟaiyiṟṟu ātal,
ottu uṟa uṇarntilāmai, uyiroṭum uṟaviṉōṭum
ittuṇai iruntatu eṉṉum taṉmaiyum iyampuvīrāl. ‘