கம்பராமாயணம் 6824 · யுத்த 8.36

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீட்டிய மழுவாள் வீரன், தாதையைச் செற்றோன் சுற்றம்
மாட்டிய வண்ணமே, தன் வருக்கமும், மற்றும் முற்றும்,
வீட்டி, என் தாதைக்காக, மெய்ப்பலி, விசும்பு உ(ள்)ளோரை
ஊட்டுவென் உயிர்கொண்டு ‘என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால்.

பொருள் · Meaning in Tamil

தீட்டுறு மழுவாள் வீரன் - தீட்டப்பெற்ற மழுவையே வாளாகக் கொண்ட வீரனாகிய பரசுராமன்; தாதையைச் செற்றோன் சுற்றம் - தன் தந்தையாகிய சமதக்கினியைக் கொன்ற கார்த்த வீரியனின் சுற்றம் முழுவதனையும்; மாட்டிய வண்ணம் என்ன - அழித்த வகையினைப் போல; வருக்கமும் மற்றும் முற்றும் - அரக்கர் இனத்தையும் மற்றும் அவனுக்குச் சார்பானோர் அனைவரையும்; வீட்டி உயிர் கொண்டு - அழித்து, இராவணன் உயிரையும் கொண்டு; என் தாதைக்காக - என் தந்தை சடாயுவின் உயிர்கொண்ட பழிக்காக; மெய்ப்பலி -அவனது உடல் எனும் பலியினை; விசும்புளோரை ஊட்டுவென் - தேவர்களுக்கு உணவாக ஊட்டுவிப்பேன்; என்னும் வார்த்தையும் உணர்த்துவீர் - என்கின்ற என் சொற்களையும் அவனுக்கு உணர்த்துங்கள்.

இராவணன் சடாயுவைக் கொன்றது, பெருமானின் உள்ளத்தே மாறாத வடுவாய்ப் பதிந்து கிடந்தமையும், அந்த வன்மம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு கணக்காக அவன் உள்ளத்துள்ளே ஊறிப் பதிந்துள்ளமையும் இங்கே வெளிப்பட்டதிறம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Just as the hero with the whetted axe-blade wiped out the kin
  2. of the one who slew his father, I will destroy his race and all the rest besides,
  3. take his life, and for my father's sake feed the gods
  4. with his body as an offering: make him understand these words too.'

What the poem says

Irāmaṉ recalls Paraśurāma, the hero with the sharpened axe, who wiped out the whole clan of Kārtavīrya after Kārtavīrya's people killed his father Jamadagni.

In the same way, Irāmaṉ says, he will destroy Irāvaṇaṉ's race and everyone who sides with him, take his life, and offer his body to the gods, all for the sake of his 'father' Caṭāyu, the old vulture king who died trying to save Cītai. Caṭāyu's death has left a lasting wound in Irāmaṉ's heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīṭṭuṟu maḻu vāḷ vīraṉ, tātaiyaic ceṟṟōṉ cuṟṟam
māṭṭiya vaṇṇam eṉṉa, varukkamum, maṟṟum muṟṟum,
vīṭṭi, eṉ tātaikkāka, meyp pali, vicumpuḷōrai
ūṭṭuveṉ uyirkoṇṭu ‘eṉṉum vārttaiyum uṇarttuvīrāl.