கம்பராமாயணம் 6825 · யுத்த 8.37

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாழ்வு இலாத் தவத்து ஓர் தையல், தனி ஒரு சிறையில் தங்கச்
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத் தன் சுற்றத்தோடும்,
வாழ்வு எலாம் தம்பி, கொள்ள, வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு இலாச் சிறையின், வைப்பென்; என்பதும் விளம்புவீரால்.

பொருள் · Meaning in Tamil

தாழ்விலாத் தவத்து ஓர் தையல் - குறைவிலாத தவம் புரிந்து வருபவளாகிய ஒப்பற்ற சீதை; தனித்து ஒரு சிறையில் தங்க - தனிமைச் சிறையில் தங்கியிருந்து (வாடுமாறு); சூழ்வு இலாவஞ்சம் சூழ்ந்த தன்னை - நினைக்கத் தகாத வஞ்சனையை எண்ணிய இராவணனை; வாழ்வெலாம் தம்பிகொள்ள - அவனுடைய வாழ்வின் வளம் முழுவதையும் அவன் தம்பியாகிய வீடணன் அடையச் செய்து; தன் சுற்றத்தோடும் - அவனுடைய சுற்றத்தார் அனைவரையும்; வயங்கு எரி நரகம் என்னும் - ஒளிரும் தீயினையுடைய நரகம் எனப்படுகின்ற; வீழ்வு இலாச் சிறையில் வைப்பென் - தப்ப இயலாத சிறையின் கண்ணே வைத்திடுவேன்; என்பதும் விளம்புவீர் - என்பதனையும் அவனுக்குச் சென்று உரைத்திடுங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The one who, so that a lady of unfailing penance should stay alone in a prison,
  2. plotted a treachery not to be thought of, him, together with his kin,
  3. once his younger brother has taken all his fortune, I will put
  4. in the inescapable prison called blazing hell: tell him this as well.'

What the poem says

The last part of the message turns Irāvaṇaṉ's own crime back on him. He has kept Cītai, a woman of flawless virtue, alone in captivity through a wicked trick.

Irāmaṉ promises that once Vīṭaṇaṉ has taken over all of Irāvaṇaṉ's wealth and power, Irāvaṇaṉ and his whole family will be locked into a prison from which there is no escape: the blazing fires of hell.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḻvu ilāt tavattu ōr taiyal, taṉittu oru ciṟaiyil taṅka,
cūḻvu ilā vañcam cūḻnta taṉṉait taṉ cuṟṟattōṭum,
vāḻvu elām tampi, koḷḷa, vayaṅku eri narakam eṉṉum
vīḻvu ilāc ciṟaiyiṉ, vaippeṉ; eṉpatum viḷampuvīrāl.