கம்பராமாயணம் 6826 · யுத்த 8.38

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நோக்கினிர் தானையெங்கும் நுழைந்தனிர்; இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லையாயின், அஞ்சல் என்ற அஃது உண்டு ‘; என்றே
‘வாக்கினின் மனத்தின் கையின் மற்று இனி நலியா வண்ணம்,
போக்குமின் விரைவின் ‘என்றான்; ‘உய்ந்தனம் ‘என்று போனார்.

பொருள் · Meaning in Tamil

தானை எங்கும் நுழைந்தனிர் நோக்கினிர் - படையிருக்கும் எல்லா இடங்களிலும் நுழைந்துள்ளீர்கள்; அங்குள்ளாரை யெல்லாம் நோக்கியுள்ளீர்கள்; இனி வேறு ஒன்றும் ஆக்குவது இல்லை ஆயின் - இங்கிருந்து வேறு இனி நீங்கள் ஆற்ற வேண்டிய பணி ஒன்று இல்லை என்றால்; அஞ்சல் என்று அஃது உண்டு அன்றே! - (நீங்கள் போகலாம். இவர்களால் இடையூறு எதுவும் உங்கட்கு முன்போல வாராது) நான் உங்கட்கு அஞ்சற்க என்று அபயம் அளித்த சொல் ஒன்று உண்டு அல்லவா! (அஞ்சாது செல்லுங்கள்.) என்றுரைத்து; மனத்தின் வாக்கினின் கையின் - (இராமபிரான் வீடணன் சுக்கிரீவன் முதலானோரை நோக்கி) மனத்தாலும் மொழியாலும், உடம்பாலும்; மற்று இனி நலியா வண்ணம் - மேலும் இனி இவர்கள் வருந்தாதவாறு; விரைவின் போக்குமின் என்றான் - விரைந்து இவர்களை இலங்கைக்கு அனுப்பி வையுங்கள் என்றான்; உய்ந்தனம் என்று போனார் - (ஒற்றர் இருவரும்) பிழைத்தோம் என்று சொல்லியவாறு அங்கிருந்து போனார்கள்.

எங்கும் நுழைந்து தானை(யை) நோக்கினிர் என இயையும். நுழைந்தனிர்- முற்றெச்சம். இனியும் நீங்கள் இங்கிருந்து ஒற்றறிய வேண்டியது இருப்பின் இருக்கலாம்; அப்படி எதுவும் இல்லையாயின் செல்லலாம் என்பான், "இனிவேறு ஒன்றும் ஆக்குவதில்லையாயின்" என்றான் பெருமான். பேராற்றலின் பெருவடிவாய் அவன் இலங்குவதையும், தன்னம்பிக்கையின் முற்றுருவாய் அவன் இயங்குவதையும், பகைவருக்கருளும் பண்புருவாய் அவன் திகழ்வதையும் தெளிவுற உணர்த்தும் திறப் பாடாய் மிளிர்வது காண்க. முன்பு உடலால் நலிந்தீர்கள்; இப்போது, மனத்தாலும், வாயாலும் கூட நலிவு செய்யாமல் அவர்களை அனுப்பி வையுங்கள் எனும் இதனோடு, அனுமன், மீட்சிப் படலத்தில் அரக்கியரை வதைக்க வரங் கேட்கையில், "என்ன தீமை இவர் இழைத்தார்? அவன் சொல்லினது. அல்லது?" (9986) என்றுரைத்த பிராட்டியின் பேரருட் கூற்றினை ஒப்பிட்டு மகிழலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You have seen the army and gone in everywhere; if there is nothing else
  2. left for you to do, there is my word "Do not fear", is there not?'
  3. Then, 'So that they are not harmed again in word, in thought or by hand,
  4. send them off quickly,' he said; and they left, saying, 'We are saved.'

What the poem says

Irāmaṉ's confidence and generosity are both on show. He tells the spies they have already been all through the army and seen everything. If there is nothing more they need to look at, they may go, protected by his promise not to fear.

He then orders his followers to send the two away quickly without hurting them again, not by hand, word or even thought. The spies leave, amazed to be alive. The commentary compares Cītai later refusing Aṉumaṉ leave to punish the demon women who guarded her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nōkkiṉir tāṉai eṅkum nuḻaintaṉir; iṉi vēṟu oṉṟum
ākkuvatu illaiāyiṉ, añcal‘ eṉṟu, aḵtu uṇṭu aṉṟē?
‘vākkiṉiṉ maṉattiṉ kaiyiṉ maṟṟu iṉi naliyā vaṇṇam,
pōkkumiṉ viraiviṉ ‘eṉṟāṉ; ‘uyntaṉam ‘eṉṟu pōṉār.