கம்பராமாயணம் 6827 · யுத்த 8.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலங்கையர் மன்னவன் - (இஃது இவ்வாறாக) இலங்கைவாழ் அரக்கர்கட்கு மன்னவனான இராவணன்; அரவமாக்கடல் அஞ்சிய அச்சமும் - ஒலிக்கின்ற பெருங்கடற்கு இறைவனாகிய வருணதேவன் (இராமனிடம்) அஞ்சிய அச்சத்தையும்; உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும்- (கடலுக்கு) வலிய அணைகட்டி முடித்த வலிமையையும்; வரவும் நோக்கி - அவ்வணை வழியாக இலங்கைக்கு (இராமன்) வந்துள்ள வருகையையும் (மனத்துள்) நோக்கி; இரவின் - அந்த இரவு நேரத்தில்; எண்ணிட வேறு இருந்தான் - சிந்திப்பதற்காகத் தனியே இருந்தான்.
வினைவலியும், தன்வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல் (திருக்கு. 471) எனும் அரசியல் கூற்றில், தன் வலியினை மட்டுமே கருதிக் கொண்டிருந்த இராவணன், மாற்றான் வலியும், அவன் வினைவலியும், துணை வலியும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது என்பது கருத்து. அக்கால மன்னர்கள் மந்திராலோசனை அவைக் கூட்டத்திற்குச் செல்லுமுன், தனியே இருந்து சிந்தனை செய்து செல்லுதல் மரபு என்பது இதனால் தெரிகிறது. தசரதனும் மந்திராலோசனைக்குச் செல்லுமுன், "சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான்" (1315) எனக் கூறப் பட்டிருத்தல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fear that the roaring great sea had felt,
- the strength that had driven a sound causeway across it,
- and his coming: considering these, the king of Ilaṅkai's people
- sat apart that night to think them over.
What the poem says
The scene moves to Ilaṅkai. Irāvaṇaṉ has learned that the ocean god himself bowed to Irāmaṉ in fear, that a solid causeway now spans the sea, and that Irāmaṉ has arrived.
That night he sits alone to think. The Tirukkuṟaḷ advises a king to weigh the task, his own strength, the enemy's strength and the strength of allies. Irāvaṇaṉ, who had only ever thought of his own power, is now forced to consider the rest. It was also the custom for kings to reflect alone before a council.