கம்பராமாயணம் 6828 · யுத்த 8.40

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வார் குலாம் முலை மாதரும் மைந்தரும்
ஆரும் நீங்க அறிஞரோடு ஏகினான்
‘சேர்க ‘என்னின் அல்லால் இளந்தென்றலும்
சார்கிலா நெடு மந்திர சாலையே.

பொருள் · Meaning in Tamil

சேர்க' என்னின் அல்லால் - 'வருக' என்று ஆணையிட்டால் அல்லாது; இளந்தென்றலும் சார்கிலா - மெல்லியதென்றற் காற்றும் உட்புக இயலாத; நெடு மந்திரசாலை - நீண்ட ஆலோசனை மண்டபத்திற்குள்; வார் குலாம் முலை மாதரும் - கச்சு ஒளிர்கின்ற மார்பினையுடைய பெண்களும்; மைந்தரும் - ஆடவரும்; ஆரும் நீங்க - பிறரும் அந்த இடத்திலிருந்தும் விலகிச் செல்ல; அறிஞரொடு ஏகினான் - (மந்திரச் சுற்றம் சார்ந்த) அறிஞர்களோடு சென்றான் இராவணன்.

"இளையார் ஒன்றும் முறைமையுணராதவர், மகளிர் என்னும் இவர் மந்திரத்தின் எய்தப்பெறாதவரே" (வில்லி. கிருட்.தூ.52) என்பராதலின், "வார்குலாம் முலைமாதரும், மைந்தரும், ஆரும் நீங்க" என்றார். முன்பும் (6077, 6088) கம்பர் கூறியது காண்க. வருண தேவன் இராமனுக்கு உடந்தையானது போல், வாயுவும் ஆகக் கூடும் என்றஞ்சி, காற்றையும் வெளி நிறுத்தினான் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sending away the women with their banded breasts, the young men
  2. and everyone else, he went with his wise counsellors
  3. into the long council hall that not even the young south breeze
  4. could enter unless told 'Come in.'

What the poem says

Irāvaṇaṉ dismisses the women, the young men and everyone else, since by custom they had no place in a secret council. He goes with his ministers into the council hall.

The hall is so closely guarded that not even the gentle south breeze may enter without being invited. The commentary adds that he may have feared the Wind god would side with Irāmaṉ, as the sea god had.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vār kulām mulai mātarum maintarum
ārum nīṅka aṟiñaroṭu ēkiṉāṉ
‘cērka ‘eṉṉiṉ allāl iḷan teṉṟalum
cārkilā neṭu mantira cālaiyē.