கம்பராமாயணம் 6829 · யுத்த 8.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உணர்வில் நெஞ்சினர் - உணரும் ஆற்றல் அற்ற மனத்தினரும்; ஊமர்- பேச இயலாதவரும், உரைப் பொருள் புணரும் கேள்வியர் அல்லர்- உரைத்த பொருள் சென்று சேர்வதற்குரிய கேள்விச் செல்வம் பெறாத செவிடரும்; பொறி இலர் - வேறு பொறிகளாகிய உறுப்புகள் அற்றவரும்; கொணரும் கூனர் குறளர் - வேண்டிய பொருள்களைக் கொண்டுவந்து தரும் கூனரும், குறளரும்; துணரும் கொழுஞ்சுடர் நல்விளக்கு ஏந்தினர் சுற்றினர் - பல முகங்களாக கொழுந்து விட்டெரிகின்ற நல்ல விளக்குகளை ஏந்தினவர்களாய் அங்கு சூழ்ந்து நின்றார்கள்.
ஏவிய அன்றிப் பிறிது ஒன்றுதாமே செய்ய வல்லவர் அல்லர் ஆதலின் கூர் அறிவு குறைந்தவர்கள், ஊமையர், செவிடர் முதலியோர் மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்போர்க்குக் குற்றேவல் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those with minds lacking understanding, the mute, those without hearing
- to take in the sense of what is said, those lacking other faculties,
- and hunchbacks and dwarfs who fetch things, holding fine lamps
- with clusters of rich flame, stood all around.
What the poem says
Only attendants who cannot betray what they hear are allowed in to serve the secret council.
They are people of dull mind, the mute, the deaf and others lacking some faculty, along with hunchbacks and dwarfs who fetch whatever is needed. They stand around the hall holding bright lamps with many flames, able to do only what they are told.