கம்பராமாயணம் 6830 · யுத்த 8.42

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பணியும் தானவர் ஆதியர் பல்முடி - (தன்னை) வணங்குகின்ற அசுரர் முதலானோரின் பற்பல மகுடங்களின்; மணியினால் விளங்கும் - மாணிக்கங்களினால் ஒளிவிடுகின்ற, மணித்தாளினான் - அழகிய பாதங்களையுடையவனான இராவணன்; மனிதர் வந்து நணியர் - (நம் பகைவரான) மனிதர்கள் (நம்மை நோக்க) வந்து அண்மையர் ஆயினர்; நமக்கு இனித் துணியும் காரியம் யாது? - நாம் இனித் துணிந்து ஆற்ற வேண்டிய செயல்கள் யாவை?; எனச் சொல்லினான் - என்று (மந்திரச் சுற்றத்தாரை நோக்கிக்) கேட்டான்.

நணிமை - அண்மை. அசுரரும் தேவரும் வந்து வணங்கும் அடியுடையான் 'மனிதர் நணியர்' என அஞ்சி ஆலோசனை கேட்க நேர்ந்துள்ளது என்பது ஒரு நயம். பகைவர் மிக அருகில் உளர் ஆனதனால் தான், இரவில் மந்திராலோசனை அவை கூட்டப்பட்டுள்ளது என்பதனை உணர்க என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The men have come and are near; what course should we now
  2. resolve upon?' he said,
  3. he whose jewelled feet shine with the gems
  4. of the many crowns of the Dāṉavas and others who bow to him.

What the poem says

Irāvaṇaṉ opens the council. His feet glitter with the jewels from the crowns of the demons and gods who bow before him, yet he now has to ask what to do because two mere men have come close.

The irony is deliberate. That the council meets at night shows how near the danger already is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘naṇiyar vantu maṉitar; namakku iṉit
tuṇiyum kāriyam yātu? ‘eṉac colliṉāṉ;
paṇiyum tāṉavar ātiyar pal muṭi
maṇiyiṉāl viḷaṅkum maṇit tāḷiṉāṉ.